முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் தபால் நிலையங்களின் சேவை பாராட்டுக்குரியது: மத்திய அரசு

செவ்வாய்க்கிழமை, 28 பெப்ரவரி 2012      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, பிப். - 29 - சேவையிலும், நவீனமயத்திலும் தமிழ்நாட்டில் தபால் நிலையங்கள் சிறப்பாக செயல்படுகின்றன என்று மத்திய அரசு பாராட்டு தெரிவித்துள்ளது. இந்தியாவில் அதிக தபால் நிலையங்கள் உள்ள மாநிலங்களில் தமிழகம் மூன்றாமிடம் வகிக்கிறது. இங்கு 12 ஆயிரத்து 65 தபால் நிலையங்கள் செயல்படுகின்றன. முதலிடத்தில் உ.பி.யும், இரண்டாமிடத்தில் ஆந்திராவும் உள்ளது. ஆனால் சேவை, கணிணி மையம் போன்ற செயல்பாடுகளில் தமிழ்நாடு தபால் நிலையங்கள் முதலிடத்தில் உள்ளது.  அலுவலகங்களை நவீனமயமாக்குவதில் தமிழ்நாடு மற்ற மாநிலங்களை பின்னுக்கு தள்ளி விட்டுள்ளது. தமிழ்நாட்டில் 2,516 தபால் நிலையங்கள் கணிணி மயமாக்கப்பட்டுள்ளன. அதே போல நெட்வொர்க் வசதியிலும் தமிழகம்தான் முதலிடம் வகிக்கிறது. இங்குள்ள தபால் நிலையங்கள் அனைத்தும் இணையதளங்கள் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. இதனால் சேவைகள் துரிதமாக மேற்கொள்ள முடிகிறது.  அந்த விஷயத்தில் சிறிய மாநிலமான கேரளா, தமிழகத்திற்கு அடுத்த நிலையில் உள்ளது. ஏ.டி.எம். மையங்கள் நிறுவியிருப்பதிலும் தமிழகம்தான் முதலிடம் வகிக்கிறது. இதுவரை 94 தபால் நிலையங்களில் ஏ.டி.எம். மிஷின் நிறுவப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக சேவை, கட்டமைப்பு, நவீன மையம் போன்றவற்றில் தமிழகம் மிக சிறப்பாக செயல்படுவதாக மத்திய அரசு பாராட்டியுள்ளது. இது குறித்து தகவல் தொடர்பு அதிகாரி ஒருவர் கூறுகையில், தபால் அலுவலக விஷயங்களில் பெரும்பாலான மாநிலங்கள் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்து கொள்கின்றன. ஆனால் தமிழ்நாட்டை பொறுத்தவரை இந்த விஷயத்தில் அக்கறையும் ஆவலும் காட்டுகிறது. மற்ற மாநிலங்களுக்கு தமிழ்நாடு முன்னுதாரணமாக செயல்படுகிறது. அதை பாராட்டும் வகையில் தமிழகத்தை தபால் துறை வளர்ச்சியில் மாதிரி மாநிலம் என்று அறிவிக்க மத்திய அமைச்சகம் திட்டமிட்டுள்ளது என்றார் அவர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்