முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குஜராத் என்கவுண்டர் கொலைகள் கண்காணிப்பு குழு தலைவராக நீதிபதி பேடி

வெள்ளிக்கிழமை, 2 மார்ச் 2012      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி. மார்ச். - 3 - குஜராத் மாநிலத்தில் கடந்த 2002 முதல் 2006 வரை நடந்துள்ள என்கவுண்டர் கொலைகள் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி எச்.எஸ்.பேடி  தலைமையில் உயர்மட்ட குழு ஒன்றை சுப்ரீம் கோர்ட்டு நியமித்துள்ளது. கடந்த 2002 ம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் நடந்த கலவரத்தின் போதும் அதன் பிறகு 2006 வரையிலும் அம்மாநிலத்தில் பல போலி என்கவுன்ட கொலைகள் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த விசாரணைகள் தாமதமாகி வருகின்றன என்றும் இந்த விசாரணைகளை துரிதப்படுத்த வேண்டும் என்றும் கோரி சுப்ரீம் கோர்ட்டில் பொது நல வழக்கு ஒன்று தொடரப்பட்டது.  இதை அடுத்து சுப்ரீம் கோர்ட்டு  முனஅனாள் நீதிபதி  எம்.எஸ்.ஷா தலைமையில் ஒரு கண்காணிப்பு குழுவை சுப்ரீம் கோர்ட்டு அமைத்தது.  ஆனால் இந்த குழுவின் தலைவர் எம்.எஸ். ஷா தனது பொறுப்பிலிருந்து விலகி கொண்டார். பிறகு இந்த குழுவுக்கு  மும்பை ஐகோர்ட்டின் முன்னாள் தலைமை நீதிபதி வைஷ்யா என்பவரை குஜராத் அரசு, சுப்ரீம் கோர்ட்டை கேட்காமலேயே நியமித்தது.  இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள சுப்ரீம் கோர்ட்டு  இப்போது சுப்ரீம் கோர்ட்டின் முன்னாள் நீதிபதி பேடியை  அந்த கண்காணிப்பு குழு தலைவராக நியமித்துள்ளது. நேற்று போலி என்கவுன்டர் கொலைகள் தொடர்பான பொது நல வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள்  அப்தப் ஆலம்,  ரஞ்சன் பிரகாஷ்  தேசாய் ஆகியோர்  தலைமையில் நடைபெற்றது.  அப்போது இந்த உத்தரவை நீதிபதிகள் பிறப்பித்தனர்.

நீதிபதி பேடி  தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்த கண்காணிப்பு குழு போலி என்கவுன்டர் கொலைகள் தொடர்பான விசாரணைகளை கண்காணித்து தனது இடைக்கால அறிக்கையை 3 மாதங்களுக்குள்  தாக்கல் செய்ய வேண்டும் என்றும்  நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்