முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கச்சத்தீவு திருவிழாவுக்கு தமிழகத்தில் இருந்து 4,283 பேர் பயணம்

சனிக்கிழமை, 3 மார்ச் 2012      தமிழகம்
Image Unavailable

 

ராமேஸ்வரம், மார்ச். - 3 - கச்சத்தீவு திருவிழாவுக்கு தமிழகத்தில் இருந்து 4,283 பக்தர்கள் படகுகள் மூலம் பயணம் செய்யவுள்ளனர் என்று ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் நந்தகுமார் தெரிவித்துள்ளார். 2010 - 11 ஆகிய ஆண்டுகளில் கச்சத்தீவு அந்தோணியார் கோயில் திருவிழாவுக்கு தமிழகம், இலங்கையை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் அந்தோணியார் கோவிலில் தரிசனம் செய்வர். இதே போல் இந்த ஆண்டு 3, 4 தேதிகளில் கச்சத்தீவுக்கு தமிழகத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் செல்லவுள்ளனர். இது குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட எஸ்.பி. காளிராஜ்மகேஷ்குமார், வருவாய் அலுவலர் ஜெயராமன், கோட்டாட்சியர் முத்துக்குமரன், கடலோர காவல்படை துணை கமாண்டர் ஷர்மா, சுங்கத்துறை துணை ஆணையர் அரசு, மீன்துறை இணை இயக்குனர் அமல்சேவியர், ராமேஸ்வரம் தாசில்தார் கதிரேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பின்னர் மாவட்ட கலெக்டர் செய்தியாளர்களிடம் கூறும் போது, கச்சத்தீவு அந்தோணியார் கோயில் திருவிழாவிற்கு பக்தர்கள் இங்கிருந்து 106 விசைப்படகுகளிலும், 35 நாட்டு படகுகளிலும் செல்லவுள்ளனர். இவர்களது மொத்த எண்ணிக்கை 4,283. திருவிழா முடிந்து 4 ம் தேதி இவர்கள் வீடு திரும்புவர். இவர்களுக்கு தேவையான உணவுகளை யாழ்ப்பாணம் திருச்சபை நிர்வாகமும், இலங்கை அரசும் செய்துள்ளன. கச்சத்தீவு செல்லும் பக்தர்கள் அங்கு தேனீர், காபி அருந்தவும், சோப், ஆயில் போன்ற பொருட்கள் வாங்கி கொள்ளவும் ஒரு பக்தர் தலா ரூ. 500 மட்டும் கொண்டு செல்லலாம் என ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்துள்ளதாக கலெக்டர் தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்