எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, மார்ச் 24 - காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் தயாரிப்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. ஐவர் குழுவை நிராகரித்து தங்கபாலு கொடுத்த லிஸ்டை சோனியா நிராகரித்தார். இரு முறைக்கு மேல் வாய்ப்பில்லை என்பதால் பல முக்கிய தலைவர்களுக்கு எம்.எல்.ஏ. பதவி கிடைக்காது என தெரிகிறது.
காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணியில் ஆரம்பம் முதலே இழுபறி நீடித்து வருகிறது. இட ஒதுக்கீடு முதல் பிரச்சினை ஆரம்பித்து தற்போது வேட்பாளர்களை இறுதிப்படுத்துவதில் வந்து நிற்கிறது. தி.மு.க., காங்கிரஸ் உறவு உறுதியாக இருக்கிறது என்று கூறி வந்தவர்கள் பிறகு ஒருவருக்கொருவர் மோதிக் கொண்டு டெல்லி வரை ராஜினாமா கடிதத்தோடு சென்று சமாதானமானது காலம் முழுவதும் சொல்லி கைகொட்டி சிரிக்க வேண்டிய வரலாறு.
காங்கிரஸ் தரப்பில் ஐவர் குழு அமைக்கப்பட்டது. ஐவர் குழுவில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை சேர்க்காததால் அவர்கள் ஆதரவாளர்கள் சத்தியமூர்த்தி பவனை முற்றுகையிட்டு உண்ணாவிரதம் இருந்தனர். ஐவர் குழு தி.மு.க.விடம் சீட் கேட்டு பெறுவதை விட தங்கள் கோஷ்டிக்கு எத்தனை எம்.எல்.ஏ.க்களை ஒதுக்குவது என்று போட்டியிட்டதை கருணாநிதி தனக்கு சாதகமாக்கிக் கொள்ள பார்த்தார். ஒரு மலையையும் சிறு உளி உடைத்து விடும் என்பது போல் கருணாநிதியின் பேரன் வயசு உள்ள ராகுல் கருணாநிதியின் எண்ணத்தை தவிடுபொடியாக்கி காங்கிரசுக்கு வேண்டிய தொகுதிகளை பெற்றார். தி.மு.க. தனது பலமான 8 தொகுதிகளை காங்கிரசுக்கு விட்டு கொடுக்க வேண்டியதாகி விட்டது. 63 தொகுதிகளாக தனது எண்ணிக்கையில் காங்கிரஸ் வளர்த்துக் கொண்டது. இதனிடையே காங்கிரசில் இளங்கோவன் கோஷ்டி பட்டியல், யுவராஜாவின் இளைஞர் காங்கிரசார் பட்டியல், ஜி.கே.வாசன் கோஷ்டி, சிதம்பரம் கோஷ்டி, தங்கபாலு கோஷ்டி என அனைவருக்கும் 63 தொகுதிகளுக்குள் பிரித்தாக வேண்டிய நிலைமை.
இங்கு இரண்டு நாள் விருப்ப மனு பெற்று அனைத்து மனுக்களையும் டெல்லிக்கு எடுத்துச் சென்றனர். அங்கு வேட்பாளர் பட்டியலை இறுதிப்படுத்தும் பணியை ஐவர் குழுவை நிராகரித்தது. தங்கபாலுவை போட்டு வயலார் ரவி, அகமது பட்டேல், ஆசாத் ஆகியோரை கொண்ட குழுவை அமைத்தார் சோனியா. தமிழ்நாட்டை பற்றி நன்கு அறிந்த சிதம்பரம், வாசன், ஈ.வி.கே.எஸ்., ஜெயக்குமார் முதலியவர்களை பயன்படுத்தாமல் தங்கபாலுவை மட்டுமே போட்டு வேட்பாளர் பட்டியலை தயாரிக்க நினைத்தது தமிழக காங்கிரஸ் தலைவர்களிடையே அதிருப்தியை உண்டு பண்ணியது.
தங்கபாலு, ஆஸ்கர், ஆசாத், வயலார் ரவி, அகமது பட்டேல் ஆகியோர் சேர்ந்து நேற்று முன்தினம் மாலை ஒரு பட்டியலை தயாரித்தனர். வெளிநாடு சென்று விட்டு நேற்று முன்தினம் மாலை டெல்லி திரும்பிய சோனியாவிடம் மேற்கண்ட குழுவினர் தயாரித்த பட்டியல் தரப்பட்டது. அதில் தங்கபாலுவின் மனைவி முதல் வேண்டிய பட்டவர்களுக்கு தொகுதி ஒதுக்கப்பட்டிருப்பதும், பழைய தி.மு.க. விசுவாசிகளே மீண்டும் பெயர் பட்டியலில் இருப்பதை தெரிந்து கொண்ட சோனியா பட்டியலை நிராகரித்துள்ளார். போய் புது பட்டியல் தயாரித்து வாருங்கள், 2 முறை எம்.எல்.வாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு வாய்ப்பு இல்லை என்று கூறி விட்டாராம். இதனால் அதிர்ச்சி அடைந்த தங்கபாலு குழுவினர் புதுப்பட்டியலை தயாரித்து வருகிறார்களாம்.
இரண்டு முறைக்கு மேல் எம்.எல்.ஏ.க்களாக இருந்தவர்களுக்கு பதவி இல்லையென்றால் காங்கிரசில் உள்ள பல பெரிய தலைவர்கள் உருளும் என தெரிகிறது. தற்போது எம்.எல்.ஏ.க்களாக உள்ள ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ. டி.யசோதா, பீட்டர் அல்போன்ஸ் (கடையநல்லூர்) ,ஞானசேகரன் (வேலூர்), டி.அமரமூர்த்தி (அரியலூர்), கோபிநாத் (ஓசூர்), சிவராஜ் (ரிஷிவந்தியம்), கோவை தங்கம் (வால்பாறை), ராம்பிரபு (பரமகுடி), கே.ஆர்.ராமசாமி (திருவாடனை), சுந்தரம்(காரைக்குடி), வேல்துரை (சேரன்மாதேவி), டாக்டர் இ.எஸ்.ராமன் (பள்ளிப்பட்டு), என்.ஆர்.ரங்கராஜன் (பட்டுக்கோட்டை) ஆகியோருக்கு மீண்டும் சீட் கிடைக்காது. இதில் பலரும் ஜி.கே.வாசன் கோஷ்டி. பலர் கருணாநிதியின் விசுவாசிகள். (காங்கிரசில் உள்ள கருணாநிதி கோஷ்டி) இவர்களுக்கு சீட் மறுக்கப்பட்டால் கருணாநிதி காங்கிரசுக்குள் காய் நகர்த்தும் பல வேலைகள் நடைபெறாது. இதுபோக எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம்,பி.வி.ராஜேந்திரன், குமாரதாஸ், டாக்டர் செல்லக்குமார், ஜெயக்குமார் ஆகியோருக்கும் மீண்டும் வாய்ப்பு கிடைக்காது. இதனால் காங்கிரசுக்குள் குத்து வெட்டு மேலும் அதிகமாகும் என தெரிகிறது. தங்கபாலு தனது மனைவிக்கு மயிலாப்பூரில் சீட்டு வாங்கி தருவதால் அங்கு போட்டியிடும் எண்ணத்தில் உள்ள கராத்தே தியாகராஜன் கடும் வெறுப்பில் உள்ளார்.
வேட்பு மனுதாக்கல் 19-ம் தேதி தொடங்கி 26-ம் தேதி முடிய உள்ளது. இன்னும் சில தினங்கள் மட்டும் உள்ள நிலையில் வேட்பாளர் பட்டியலே தயாரிக்க முடியாமல் திணறி வருகின்றனர். இன்று பட்டியல் வெளியானால் இரண்டு நாளைக்குள் வேட்பாளர் மனுத்தாக்கல் செய்ய வேண்டும். வேட்பாளர் பட்டியல் வெளியிட்டவுடன் காங்கிரசில் பெரும் ரகளை காத்திருக்கிறது. தற்போது டெல்லியில் இருக்கும் யசோதாவிற்கு சீட் தராவிட்டால் அங்கேயே தீக்குளிப்பேன் என்று கூறியுள்ளதாக கூறப்படுகிறது. இதேபோல் டெல்லியிலும், சென்னை சத்தியமூர்த்திபவனிலும் தங்கபாலுவின் கொடுபாவியை கொளுத்த எதிர்ப்பாளர்கள் தயாராகி வருவதால் சென்னை சத்தியமூர்த்தி பவனில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சோனியாவின் திட்டப்படி பழைய தலைகளை புறக்கணித்துவிட்டு புதுமுகங்களை போட்டால் பெரும் ரகளை வெடிக்கும். தமிழகம் முழுவதும் தொகுதிகளில் அதன் பிரதிபலிப்பு இருக்கும். புதுமுகங்களை ஜெயிக்க விடாமல் பழைய தலைகள் உள்வேலைகள் செய்யும் என கூறப்படுகிறது. ஏற்கனவே தி.மு.க.வை நெருக்கி தொகுதிகளை பிடுங்கியதால் தனக்கு 2 கண் போனாலும் பரவாயில்லை, எதிரிக்கு 1 கண் போக வேண்டும் என்று தி.மு.க. மேலிடம் முதல் தொண்டர்கள் வரை முடிவெடுத்து உள்ளதால் பிரச்சினை உள்ளது. இதில் இந்த பிரச்சினையும் உள்ளதால் தமிழகத்தில் பல தொகுதிகளிலும் காங்கிரஸ் வெல்வது கேள்விக்குறியே.
தன்னால் நடக்க முடியாதவன் ஓடுகிறவனை குறை சொன்னானாம். அதுபோல் தற்போது இவர்களுக்குள் ஆயிரம் குத்துவெட்டு, குழிப்பறிப்பு, கூட்டணி மோதல் இருக்கும்போது நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என்று உள்ளுக்குள் பொறுமியபடி தி.மு.க. கூட்டணி தலைவர்கள் பேட்டி அளிப்பதுதான் விந்தையிலும் விந்தை.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 1 week ago |
-
வருமான சமத்துவத்தில் உலக அளவில் 4-ம் இடம் பிடித்த இந்தியா
06 Jul 2025புதுடெல்லி : வருமான சமத்துவத்தின் அடிப்படையில் உலகளவில் நான்காவது நாடாக இந்தியா மாறியுள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.
-
குண்டு பாய்ந்து ராணுவ வீரர் பலி
06 Jul 2025ஜம்மு : ஜம்மு-காஷ்மீரில் துப்பாக்கியில் இருந்து குண்டு பாய்ந்து ராணுவ வீரர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-07-2025.
06 Jul 2025 -
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-07-2025.
06 Jul 2025 -
ரஷ்யா, சீனா நிதி அமைச்சர்களுடன் நிர்மலா சீதாராமன் பேச்சுவார்த்தை
06 Jul 2025ரியோ டி ஜெனிரோ : பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு ரஷ்ய அதிபர் புதின் இந்தியாவிற்கு அளித்த ஆதரவிற்கு நன்றி தெரிவிப்பதாக நிர்மலா சீதாராமன் கூறினார்.
-
குற்றச்சம்பவங்களை தடுப்பதில் பீகார் அரசு தோல்வி: ராகுல் காந்தி
06 Jul 2025பாட்னா: குற்றச் சம்பவங்களை தடுப்பதில் பீகார் அரசு தோல்வி அடைந்து விட்டதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
-
டெக்சாஸ் வெள்ளம் - 51 பேர் பலி
06 Jul 2025டெக்சாஸ் : அமெரிக்காவில், வெள்ளத்தில் சிக்கி, 15 குழந்தைகள் உட்பட 43 பேர் உயிரிழந்தனர். முகாமில் இருந்து 27 பெண்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.
-
இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்: காசாவில் 33 பேர் உயிரிழப்பு
06 Jul 2025காசா : காசாவில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதலில் 33 பேர் உயிரிழந்தனர்.
-
பிரேசில் சென்றார் பிரதமர் மோடி: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பு
06 Jul 2025ரியோ டி ஜெனிரோ : 17-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி பிரேசில் சென்றார்.
-
சென்னை-தூத்துக்குடி விமானத்தில் திடீர் தொழில்நுட்ப கோளாறு
06 Jul 2025சென்னை : தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னையில் இருந்து தூத்துக்குடி புறப்பட வேண்டிய ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் புறப்பாடு தாமதமாகியுள்ளது.
-
வரும் ஆகஸ்டு 15-ம் தேதி நெல்லையில் பா.ஜ.க.வின் முதல் மாநாடு
06 Jul 2025நெல்லை : தமிழக சட்டசபை தேர்தலையொட்டி நெல்லையில் பா.ஜ.க.வின் முதல் மாநாடு ஆகஸ்டு 15-ந்தேதி நடைபெறும் என அக்கட்சி அறிவித்து உள்ளது.;
-
30-ம் தேதி விண்ணில் பாய்கிறது நிசார் செயற்கைக்கோள்: இஸ்ரோ
06 Jul 2025சென்னை: நிசார் செயற்கைக்கோளை வருகிற 30-ம் தேதி விண்ணில் ஏவ விஞ்ஞானிகள் திட்டமிட்டு உள்ளனர்
-
அடுத்த போட்டியில் 200 ரன்கள் குவிப்பேன்: வைபவ் சூர்யவன்ஷி
06 Jul 2025லண்டன்: அடுத்தப் போட்டியில் 200 ரன்கள் குவிக்க முயற்சி செய்வேன் என்று இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி தெரிவித்தார்.
-
மகளிர் உரிமைத் தொகை பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
06 Jul 2025சென்னை: மகளிர் உரிமைத் தொகை பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவன எக்ஸ் கணக்கு முடக்கம்: மத்திய அரசு விளக்கம்
06 Jul 2025புதுடெல்லி: ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் எக்ஸ் கணக்கு இந்தியாவில் முடக்கபட்டது குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
-
மேல்விஷாரத்தில் வரும் 10-ம் தேதி ஆர்ப்பாட்டம்: அ.தி.மு.க. அறிவிப்பு
06 Jul 2025சென்னை: மேல்விஷாரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தரமான மருத்துவ சிகிச்சையை அளிப்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி வரும் ஜூலை 10 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நட
-
பா.ம.க. நிர்வாக குழுவில் இருந்து அன்புமணி நீக்கம்: ராமதாஸ் அதிரடி
06 Jul 2025திண்டிவனம்: பா.ம.க. தலைமை நிர்வாக குழுவில் இருந்து அன்புமணியை நீக்கம் செய்து ராமதாஸ் நடவடிக்கை எடுத்துள்ளார்.
-
'அமெரிக்கா கட்சி' என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியை தொடங்கினார் எலான் மஸ்க்
06 Jul 2025வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்புடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ள நிலையில், அமெரிக்கா கட்சி என்ற புதிய கட்சியை எலான் மஸ்க் தொடங்கியுள்ளார்.
-
கவாஸ்கரின் 54 ஆண்டுகால சாதனையை முறியடித்த கில்
06 Jul 2025பர்மிங்காம்: இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் அதிக ரன்கள் குவித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கரின் சாதனையை முறியடித்துள்ளார்.
-
90-வது பிறந்த நாள்: புத்த மத துறவி தலாய் லாமாவுக்கு பிரதமர் வாழ்த்து
06 Jul 2025புதுடெல்லி : தலாய் லாமாவின் நீடித்த உடல் ஆரோக்கியம் மற்றும் நீண்டகால வாழ்க்கைக்காக நாங்கள் வேண்டி கொள்கிறோம் என்று பிரதமர் மோடி பதிவிட்டு உள்ளார்.
-
பாகிஸ்தானில் சோகம்: அடுக்குமாடி இடிந்து 27 பேர் பலி
06 Jul 2025லாகூர் : பாகிஸ்தான் நாட்டின் லாகூரில் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விபத்துக்குள்ளானதில் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி 9 பெண்கள் உள்பட 27 பேர் உயிரிழந்தனர்.
-
புரூக்குக்கு ரிஷப் பதிலடி
06 Jul 2025இந்தியா-இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் நடந்தது.
-
நாமக்கல் அருகே ரயில் முன் பாய்ந்து ஆர்.டி.ஓ., மனைவி தற்கொலை
06 Jul 2025நாமக்கல்: திருச்சி வட்டாரப் போக்குவரத்து அலுவலரும் அவரது மனைவியும் நாமக்கல் அருகே ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
தெலுங்கானாவில் இனி 10 மணி நேர வேலை: மாநில அரசு அறிவிப்பு
06 Jul 2025ஹைதராபாத் : தெலுங்கானாவில் வணிக நிறுவனங்களுக்கான தினசரி வேலை நேரம் 10 மணி நேரமாக உயர்த்தப்பட்டுள்ளது.
-
பீகார் மாநிலத்தில் 3 கோடி வாக்காளர்கள் நீக்கப்படும் அபாயம்: சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு பதிவு
06 Jul 2025புதுடில்லி : பீகாரில் சுமார் 3 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வாக்குரிமையை இழக்கும் அபாயம் இருப்பதாக சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டள்ளதொரு பொதுநல மனுவில் குற