முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோவா முதல்வராக மனோகர் பாரிக்கர் பதவி ஏற்றார்

சனிக்கிழமை, 10 மார்ச் 2012      இந்தியா
Image Unavailable

 

பனாஜி,மார்ச்.10- கோவா மாநில பாரதிய ஜனதா முதல்வராக மனோகர் பாரிக்கர் பதவி ஏற்றார். அவருடன் 3 அமைச்சர்களும் பதவி ஏற்றுக்கொண்டனர். முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு கவர்னர் பதவிப்பிரமாணமும் ரகசிய காப்பும் செய்துவைத்தார். 

உத்திரப்பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர், பஞ்சாப் ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடந்தது. இதில் உத்திரப்பிரதேச மாநிலத்தில் சமாஜ்வாடி கட்சி அமோக வெற்றிபெற்றுள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் காங்கிரஸ் மீண்டும் வெற்றிபெற்று ஆட்சியை பிடித்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் சிரோன்மணி அகாலிதளம் கூட்டணி ஆட்சியை பிடித்துள்ளது. கோவா மாநிலத்தில் பாரதிய ஜனதா கூட்டணி வெற்றிபெற்றுள்ளது. மொத்தம் உள்ள 40 சட்டமன்ற தொகுதிகளில் பா.ஜ.க. 21 இடங்களையும் அதன் கூட்டணி கட்சியான மகாராஷ்டிரா கோமந்த கட்சி 3 இடங்களையும் கைப்பற்றியுள்ளது. சட்டமன்ற உறுப்பினர்கள் குழுக்கூட்டத்தில் முதலமைச்சராக மனோகர் பாரிக்கர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் 3-வது முறையாக நேற்று பிற்பகல் முதல்வராக பதவி ஏற்றனர். அவருடன் பல அமைச்சர்களும் பதவி ஏற்றனர். கூட்டணி கட்சியான மகாராஷ்டிரா கோமந்த கட்சியை சேர்ந்த ராமகிருண்ன தவலிகார் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளார். இவர் முந்தையை காங்கிரஸ் ஆட்சியில் போக்குவரத்து அமைச்சராக இருந்தவர். காங்கிரசுடன் கருத்து வேறுபாடு காரணமாக தேர்தலுக்கு முன் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலகி பா.ஜ.கூட்டணியுடன் இணைந்து போட்டியிட்டு மீண்டும் அமைச்சராக உள்ளார். பாரிக்கரின் முந்தையை மந்திரி சபையில் அமைச்சர்களாக இருந்த பிரான்சிஸ் டிஸோசா, மாதங்கி சல்தான்கா ஆகிய இருவரும் மீண்டும் அமைச்சர்களாகி உள்ளனர். மாநில பா.ஜ.க.தலைவர் லட்சுமிகாந்த் பரிசேகரும் அமைச்சராகி உள்ளார். பதவி ஏற்பு விழா பனாஜியில் உள்ள கோவா விளையாட்டு மைதானத்தில் நேற்று மாலை நடைபெற்றது. பதவி ஏற்பு விழாவில் பா.ஜ. தலைவர்களும் முக்கிய பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்