முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெண்ணுக்கு ரயில்வேயில் வேலை: பிரதமரின் நேயம்

திங்கட்கிழமை, 12 மார்ச் 2012      இந்தியா
Image Unavailable

இந்தூர், மார்ச்.13 - 2008 ம் ஆண்டு யு.பி.எஸ்.சி. குரூப் பி தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்ற பார்வையற்ற பெண் பூர்ணிமா ஜெயினுக்கு பிரதமர் மன்மோகன்சிங்கின் தலையீட்டால் ரயில்வே துறையில் வேலை கிடைத்துள்ளது. மத்திய பிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்தவர் டாக்டர் பிரகாஷ் ஜெயின். இவரது மகள் பூர்ணிமா ஜெயின். பூர்ணிமாவுக்கு 25 சதவீதம்தான் கண்பார்வை உள்ளது. ஆனால் குரூப் பி தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார் பூர்ணிமா. ஆனால் அவரது பார்வை குறைபாடை காரணம் காட்டி அவருக்கு அரசு வேலை வழங்க அதிகாரிகள் மறுத்து விட்டனர். இதையடுத்து பூர்ணிமா ஐகோர்ட்டுக்கு சென்றார். விசாரணை செய்த கோர்ட் அவளை மத்திய நிர்வாக ஆணைய அலுவலகத்தை அணுகுமாறு வழிகாட்டினர். ஆனால் அங்கு சென்ற பிறகும் அவருக்கு பணி நியமன உத்தரவு கிடைக்கவில்லை. இதையடுத்து அவர் பிருந்தாகாரத் எம்.பி. உதவியால் பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்து தனது நிலையை எடுத்து கூறினார். பிரதமரின் தலையீட்டால் பூர்ணிமாவுக்கு ரயில்வே துறையில் வேலை கிடைத்துள்ளது. 4 ஆண்டு போராட்டத்திற்கு பிறகு வேலை கிடைத்துள்ளது மிக மகிழ்ச்சியளிப்பதாக பூர்ணிமா தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்