முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதுவை சட்டசபை 28-ந் தேதி கூடுகிறது

செவ்வாய்க்கிழமை, 13 மார்ச் 2012      தமிழகம்
Image Unavailable

 

புதுச்சேரி, மார்ச்.14 - புதுவை சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் ஆண்டுதோறும் மார்ச் மாதம் இறுதியில் தொடங்கும். இந்த ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற 28-ந் தேதி காலை 10 மணிக்கு தொடங்குகிறது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை சட்டசபை செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ளார். ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் அன்றைய தினம் கவர்னர் இக்பால்சிங் உரையாற்றுகிறார். 

தொடர்ந்து கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. மறுநாள் முதல்வர் ரங்கசாமி அரசின் 3 மாதம் முதல் 6 மாத காலவரையிலான செலவினங்களுக்கான மசோதாவை தாக்கல் செய்கிறார். 

இந்த கூட்டம் அனேகமாக ஓரிரு நாள் மட்டும் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 5 மாநில சட்டசபை தேர்தலினால் மத்திய திட்டக்குழு கூட்டம் நடப்பது தள்ளிப்போய் உள்ளது. இதனால் புதுவை மாநிலத்திற்கான திட்ட நிதி ஒதுக்கீடு இன்னும் இறுதி செய்யப்படவில்லை. திட்ட ஒதுக்கீடு பெற்ற பின்பு மத்திய உள்துறை அமைச்சகத்தின் அனுமதி பெற்ற பின்பே பட்ஜெட் தாக்கல் செய்ய முடியும். 

இதனால் முழுமையான பட்ஜெட்டை ஓரிரு மாதங்களுக்கு பிறகு முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்