முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய பட்ஜெட் முக்கிய அம்சங்கள்

சனிக்கிழமை, 17 மார்ச் 2012      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, மார்ச் 17 - மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி பாராளுமன்றத்தில் நேற்று 2012-13 ஆம் நிதி ஆண்டிற்கான பொது பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் வருமாறு :-

* பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள மத்திய அரசின் பங்குகளை விற்று ரூ. 30 ஆயிரம் கோடி திரட்டப்படும். 

* பல்பொருள் சில்லரை விற்பனையில் நேரடி அன்னிய முதலீட்டை அனுமதிப்பது தொடர்பாக ஒருமித்த கருத்தை பெற்றபிறகு முடிவு செய்யப்படும்.

* ராஜீவ்காந்தி பங்கு சேமிப்பு திட்டம் என்ற புதிய சேமிப்புத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும். சில்லரை முதலீட்டாளர்களுக்கு வருமான வரி விலக்கு அளிப்பதற்காக இந்த திட்டம் கொண்டுவரப்படுகிறது. 

* 12-வது ஐந்தாண்டுத் திட்டத்தில் உள்கட்டமைப்பு வசதிகளுக்கான ஒதுக்கீடு 50 லட்சம் கோடியாக உயர்த்தப்படுகிறது.

* சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைதுறை அமைச்சகத்திற்கான நிதி ஒதுக்கீடு 14 சதவீதம் அதிகரிக்கப்பட்டு ரூ. 25 ஆயிரத்து 360 கோடியாக உயர்த்தப்படும். 

* நெசவாளர்கள், நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் பெற்ற கடன்கள் ரூ. 3,884 கோடி தள்ளுபடி செய்யப்படுகிறது. 

* சிறிய தொழில் முனைவோரை ஊக்குவிக்க ரூ. 5 ஆயிரம் கோடியில் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. 

* விவசாயத் துறைக்கான ஒதுக்கீடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. 

*  வருமான வரி விலக்கு உச்சரவரம்பு ரூ. 1.80 லட்சத்திலிருந்து ரூ. 2  லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. 

* ரூபாய் 2 லட்சம் முதல் 5 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு 10 சதவீதம் வருமான வரி விதிக்கப்படும். 

* ரூ. 5 லட்சம் முதல் ரூ. 10 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு 20 சதவீதம் வருமான வரி விதிக்கப்படுகிறது. 

10 லட்சத்திற்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு 30 சதவீதம் வருமான வரி விதிக்கப்படும். 

* மூத்த குடிமக்களுக்கான வருமான வரி விலக்கு உச்சவரம்பு (60 முதல் 80 வயது வரை உள்ளவர்களுக்கு) ரூ. 2.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. 

* மத்திய புலனாய்வுத் துறை நிறுவனத்திற்கு (சி.பி.ஐ.க்கு) ரூ. 395.77 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

* வங்கி சேமிப்பு கணக்குகள் மூலம் கிடைக்கும் வட்டி வருமானத்திற்கு ரூ. 10 ஆயிரம் வரை இனி வரி கிடையாது.  

* இந்த பட்ஜெட்டினால் பெரிய கார்கள், இறக்குமதி செய்யப்பட்ட சைக்கிள்கள், சிகரெட், பீடி, இறக்குமதி செய்யப்பட்ட தங்க, வைர ஆபரணங்கள் ஆகியவற்றின் விலைகள் அதிகரிக்கும். ஆனால் வெள்ளி ஆபரணங்களின் விலைகள் குறைவாகவே இருக்கும்.

* பல்வேறு மானிய செலவுகள் குறைக்கப்படும். அல்லது முழுமையாக நிறுத்தப்படும். 

* இந்தியர்கள் வெளிநாட்டு வங்கிகளில் கறுப்புப் பணத்தை பதுக்கி வைத்திருப்பதை தடுக்க வெளி நாட்டு வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் இந்தியர்கள் அந்த கணக்கு விபரங்களை கட்டாயமாக தெரிவிக்க வேண்டும் என்பதற்கான சட்ட மசோதா ஒன்று விரைவில் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். 

* இந்த நிதி ஆண்டிற்கான மொத்த செலவினம் ரூ. 14 லட்சத்து 90 ஆயிரத்து 925 கோடி.

* அரசின் மொத்த வரி வருமானம் 10 லட்சத்து 77 ஆயிரத்து 612 கோடி.

* இந்த ஆண்டிற்கான நிதிப் பற்றாக்குறை 3 லட்சத்து 13 ஆயிரத்து 313 கோடியாகும். 

* ராணுவத்திற்கு இந்த பட்ஜெட்டில் 1 லட்சத்து 93 ஆயிரத்து 407 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* பங்கு சந்தையில் ரூ. 50 ஆயிரம் வரை முதலீடு செய்பவர்களுக்கு சலுகைகள் வழங்கப்படும். 

*  உள்கட்டமைப்புக்கு தேவையான நிதி ஆதாரத்தை பெருக்கும் வகையில் அடுத்த நிதி ஆண்டில் ரூ. 60 ஆயிரம் கோடிக்கு வரி இல்லா பத்திரங்கள் வெளியிடப்படும். 

* யூரியா உரம் உற்பத்தில் இந்தியா இன்னும் 5 ஆண்டுகளில் தன்னிறைவு பெறும். 

* விவசாய கடனை குறிப்பிட்ட காலத்திற்குள் திருப்பிக் கொடுக்கும் விவசாயிகளுக்கு பரிசுகள் வழங்கப்படும். விவசாயிகளுக்கு வழங்கப்படும் கடன் அட்டைகளை இனி ஏ.டி.எம்.களில் பயன்படுத்தலாம். 

* மதிய உணவுத் திட்டத்திற்கு ரூ. 11,937 கோடி ஒதுக்கப்படும். 

* 12 வது ஐந்தாண்டுத் திட்டத்தில் 6000 பள்ளிக்கூடங்கள் தொடங்கப்படும். 

* 7 மருத்துவக் கல்லூரிகள் அகில இந்திய மருத்துவக்கழகமாக தரம் உயர்த்தப்படும். 

* ஆதார் திட்டத்தின் கீழ் அடுத்த மாத தொடக்கத்தில் 40 கோடி பேர் பதிவு செய்யப்படுவார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்