முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கணவன்-மனைவி புரிந்து கொள்வது எப்படி: முதல்வர் பேச்சு

வியாழக்கிழமை, 22 மார்ச் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மார்ச்​-22 - சென்னையில் நேற்று 7 திருமணங்களை நடத்தி வைத்தார் முதல்வர் ஜெயலலிதா. அப்போது மணமக்களை வாழ்த்திய பின்னர் 2 கதைகளைச் கூறினார். அதில் அவர் பேசியதாவது:- ஒரு ஊரிலே ஒரு விவசாயி வாழ்ந்து வந்தார்.  அவருக்கு எல்லா வசதிகளும் இருந்தன.  எந்தக் குறையும் கிடையாது.  விசாலமான வீட்டில் தன் குடும்பத்துடன் மகிழ்ச்சியோடு வாழ்ந்து வந்தார்.  ஒரு நாள் அவர் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த போது அவரது கனவில் கடவுள் தோன்றினார்.  இதோ பாருப்பா! நான் உன்னை விட்டுப் போகலாம் என்ற முடிவுக்கு வந்துட்டேன். அதனால, நான் புறப்படுவதற்கு முன்பு உனக்கு என்ன வேணுமோ என்னிடம் கேட்டு வாங்கிக்கோ... நான் போன பிறகு சிரமப்படாதே... இப்பவே கேள்... உனக்கு என்ன வேண்டும்? என்று கடவுள் கேட்டார்.

இப்படி திடீரென்று கேட்டதும் விவசாயிக்கு கையும் ஓடலை காலும் ஓடலை!  உடனே கடவுள் சரி உனக்கு ஒரு நாள் அவகாசம் தருகிறேன் யோசித்து வை.  நாளை இரவு மறுபடியும் சந்திப்போம் என்று சொல்லி கடவுள் மறைந்துவிட்டார். வாரிச் சுருட்டி கொண்டு எழுந்த அந்த விவசாயி தன் குடும்பத்தையே எழுப்பி ஒரு ஆலோசனைக் கூட்டம் போட்டார்.

இப்ப நம்மகிட்ட எவ்வளவு சொத்து இருக்கோ இது மாதிரி இன்னொரு பங்கு வேணும்ன்னு கேளுங்க அது போதும்... என்று அந்த விவசாயியின் மனைவி ஆலோசனை சொன்னாள்.  அவரது மகனோ உடுத்தத் துணியும் உட்கார்ந்து சாப்பிடுற அளவுக்கு வசதி வாய்ப்பும் எப்போதும் தட்டுப்பாடு இல்லாம கிடைக்கணும்னு கடவுள்கிட்ட கேளுங்க என்றான்.  அவரது மகளோ நம்ம வீட்ல எப்பவும் தரித்திரம் ஏற்படக் கூடாதுன்னு நறுக்குனு ஒரே வரமா கடவுளிடம் கேட்டுப் பெறுங்கப்பா... என்றாள்.  கடைசியாய் அவனுடைய தாய் ஏம்ப்பா இந்தக் குடும்பத்துல எல்லோரும் அன்பா வாழணும், பாசத்தோட வாழணும், சண்டையில்லாம வாழணும்... அப்படின்னு கேளுப்பா... அது போதும் என்றாள்.  அனைத்தையும் கேட்டுக் கொண்ட அந்த விவசாயிக்கு தன் தாய் சொன்ன ஆலோசனையே சரி எனப் பட்டது.  சொன்னபடியே அடுத்த நாள் கனவிலும் கடவுள் வந்தார்.  என்னப்பா... முடிவு செய்தாச்சா? என்று கடவுள் கேட்க, இறைவா! எங்க வீட்ல எல்லோரும் அன்பா பிரியமா பாசமா இருக்கணும்.   எங்களுக்குள் எப்போதும் சண்டையே வரக் கூடாது; அந்த வரம் ஒன்று மட்டும் போதும் என்று பட்டென்று சொன்னான் அந்த விவசாயி.  இறைவன் யோசித்தார்.  கடவுள் யோசிப்பதைப் பார்த்த அவன் இறைவா ஏன் யோசிக்கிறாய்? எனக் கேட்டான்.  null இப்படி கேட்டதனால நானும் என் முடிவை மாத்திக்க வேண்டியது தான் என்றார் கடவுள்.  இவனுக்கு ஒன்றும் புரியலை.  என்ன சொல்றீங்க? என்றான் விவசாயி.

மனிதனே! எந்த இடத்தில் அன்பும் பாசமும் இருக்கிறதோ அந்த இடத்தில் தானே நான் இருக்க ஆசைப்படுவேன்? சண்டை சச்சரவு இல்லாத அமைதியான இடம் தான் நான் வாழுகின்ற இடம்.  அதனால null என்கிட்ட கேட்ட வரத்தின் மூலமா உன்னை விட்டு எங்குமே நான் போக முடியாதபடி செய்துவிட்டாய்... இனி உன்னுடனே நான் இருப்பேன் என்று சொல்லி இறைவன் மறைந்தார்.  அன்பும், பாசமும் nullடித்து நிலைக்கும் இடத்தில் தான் இறைவன் குடியிருப்பார் என்பதை உணர்ந்து அதற்கேற்றார் போல் மணமக்கள் தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும். அதற்கு தலையாய தேவையெல்லாம் ஒருவர் மீது ஒருவர் அதிகாரம் செலுத்தாமல்; ஒருவர் மற்றவரை உயர்த்தியும் தாழ்த்தியும் நடத்தாமல்; இருவரும் சமம் என்னும் கோட்பாடு தான் இல்லறத்தை நல்லறமாக்கும்.

இப்படித் தான் ஒருவர் தன் மனைவியோடு எதற்கெடுத்தாலும் அடிக்கடி சண்டைக்கு நிற்பார். ஒரு நாள் அலுவலகம் சென்று null வேலை செய்து பார்; சம்பாதிப்பது எவ்வளவு கடினம் என்பது உனக்கு புரியும்... ஒரு நாள் ஆபிஸ் போய் வா பார்ப்போம்... என்றெல்லாம் அடிக்கடி மனைவியை சவாலுக்கு அழைப்பார்.  அந்தப் பெண்ணும் பல காலம் இதைக் கேட்டுக் கேட்டு புளித்துப் போனாள்.  ஆனாலும், ஒரு நாள் பொறுமை இழந்தவளாய் எப்பப் பார்த்தாலும் இப்படியே சொல்றீங்க! ஒரு நாள் nullங்க வீட்டில் இருந்து இந்தப் பசங்களையெல்லாம் பார்த்துக்கோங்க... காலையில குளிப்பாட்டி சாப்பிட வைத்து வீட்டுப் பாடங்கள் சொல்லிக் கொடுத்து சீருடைகள் அணிவித்து பள்ளிக்கு அனுப்பிப் பாருங்கள்... அதோடு வீட்டில் சமைப்பது துவைப்பது என எவ்வளவு வேலைகள் இருக்கு... ஒரு நாள் இதையெல்லாம் nullங்களும் தான் செஞ்சிப் பாருங்களேன்... என பொங்கி எழுந்து எதிர் சவாலை எடுத்து விட, அவளது கணவனோ, சரி அப்படியே செய்வோம்... இன்று null என் அலுவலகத்துக்கு போ... நான் வீட்டில் இருந்து பசங்களைப் பார்த்துக் கொள்கிறேன் என்று போட்டிக்கு தயாரானான்.  அவன் மனைவியோ ஏங்க இதெல்லாம் வேண்டாங்க உங்களாளெல்லாம் முடியாது... என்று சொல்லிப் பார்த்தாள். ஆனாலும் விடாப்பிடியாய் அவளது கணவன் நிற்க,  சரி, நான் என்ன செய்ய முடியும்? என்றவாறே வீட்டையும், பிள்ளைகளையும் கணவனிடம் ஒப்படைத்துவிட்டு அவள் அலுவலகத்திற்கு புறப்பட்டுப் போனாள்.  அங்கே போய்ப் பார்த்தால் அலுவலகம் ஒரே குப்பையும், கூளமுமாகக் கிடந்தது. முதலாளியின் மனைவி என்பதையெல்லாம் மனதில் கொள்ளாமல் அவளே கூட்டிப் பெருக்கி அனைத்தையும் சுத்தம் செய்தாள்.  வருகைப் பதிவேட்டை சரிபார்த்து கால தாமதமாய் அலுவலகம் வருபவர்களை கண்டித்து அறிவுறுத்தினாள்.  கணக்கு வழக்குகளைப் பார்த்தாள். இடையிடையே இந்நேரம் வீட்டில் அந்தப் பாவி மனுஷன் என்ன செய்யறாரோ... என்ற கவலை வேறு வந்து வந்து போனது.  ஒரு வழியாய் மாலை ஐந்து மணி ஆனதும் வீட்டிற்கு புறப்படலாம் என்ற வேளையில் அலுவலகத்தில் பணிபுரிபவரின், மகளின் திருமண வரவேற்பு குறித்து உதவியாளர் வந்து சொல்ல உடனே அதற்கொரு பரிசுப் பொருளை வாங்கிக்கொண்டு அந்த கல்யாண மண்டபத்திற்கு சென்றாள்.  மணமக்களிடம் அன்பளிப்பைக் கொடுத்துவிட்டு தன் கணவர் வராததற்கு பொய்யான காரணம் ஒன்றை சொல்லிவிட்டு மணமக்களின் கட்டாயத்தின் பேரில் சாப்பிடச் சென்றாள்.  பந்தியில் உட்கார்ந்தவளுக்கு சிந்தனையெல்லாம் வீட்டைப் பற்றியே.  இலையில் வைத்த ஜாங்கிரியை மூத்தவனுக்கு பிடிக்கும் என்று தனது கைப்பைக்குள் எடுத்து வைத்து பத்திரப்படுத்தினாள்.  முறுக்கு அவருக்கு பிடிக்குமே என்று அதையும் எடுத்து தான் சாப்பிடுவது போல் நடித்துக்கொண்டே தன் கைப்பைக்குள் வைத்துக் கொண்டாள்.  அவள் சாப்பிட்டதை விட, பிள்ளைகளுக்கும், கணவனுக்கும் என அவள் பைக்குள் பதுக்கியதே அதிகம்.  ஒரு வழியாய் வேக வேகமாய் வீட்டை நோக்கி வந்திறங்கியவள் ஆட்டோவை விட்டு இறங்கி வீட்டிற்குள் அவசரத்தோடே நுழைந்தாள்.  வாசலில் அவளது கணவன் கையில் ஒரு பிரம்போடு முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிப்பது போல் கோபத்தின் உச்சத்திற்கே ஏறிய வண்ணம் இங்கும் அங்குமாக நடந்து கொண்டிருந்தான்.

இவளைப் பார்த்ததும் பிள்ளையா பெத்து வச்சிருக்கே... அத்தனையும் குரங்குங்க... எதுவும் சொல்றதைக் கேட்க மாட்டேங்குது... படின்னா படிக்க மாட்டேங்கிறாங்க... சாப்பிடுன்னா சாப்பிட மாட்டேங்கிறாங்க... அத்தனை பேரையும் அடிச்சு அந்த ரூம்ல படுக்க வச்சிருக்கேன்.   பாசம் காட்டுறேன்னு பிள்ளைகள நல்லா கெடுத்து வச்சிருக்கே... என்று மனைவி மீது கோபம் கொப்பளித்துப் பாய...அவளோ அய்யய்யோ பிள்ளைங்களை அடிச்சீங்களா... என்றவாறே உள்ளே ஓடி தாழிட்டிருந்த கதவை திறந்து பார்த்தாள். உள்ளே ஒரே அழுகையும், பொருமலுமாய் பிள்ளைகள்.

விளக்கைப் போட்டவள் அதிர்ந்தவாறே ஏங்க இவனையும் அடிச்சிப் படுக்க வச்சீங்க..? இவன் எதிர்வீட்டுப் பையனாச்சே...? என்று அவள் அலற...  அது தானா அவன் எழுந்து எழுந்து வெளியே ஓடுனான்? என அவளது கணவனும் அதிர்ச்சியுற அந்த நிலையில் இருவருக்கும் ஒன்று புரிந்தது.  இல்லாள் என்றும் மனைக்கு உரியவள் மனைவி என்றும் சங்க காலம் தொடங்கி நம் மூதாதையர்கள் சொல்கிறார்கள் என்றால் அது சாதாரணமானது அல்ல.

ஒரு இல்லத்தை பராமரிப்பதிலும்; பெற்றெடுத்த பிள்ளைகளுக்கு வளமான வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பதிலும்; ஒரு பெண்ணின் பங்கும் தலையாயது. அது போலவே, பொருளீட்டி வரக்கூடிய ஆண்களின் பங்கும் அளப்பரியது.  அதுவும் தற்காலத்தில் இது ஆணுக்கு, இது பெண்ணுக்கு என்று இனம் பிரித்துக் கொள்ளாத வகையில் வாழ்க்கை சமத்துவம் ஆகிவிட்டது.

இந்நிலையில் ஒரு இல்லத்தின் மகிழ்ச்சிக்கு அடிப்படைக் காரணமே கணவன் மனைவி மீதோ, மனைவி கணவன் மீதோ ஆதிக்கம் செல்லுத்தாமல் அன்பால் எதையும், சாதிக்கும் மனநிலையைக் கொண்டிருப்பது தான். உயர்வு தாழ்வு கொள்ளாது ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வது தான். இத்தகைய புரிதலையும், அன்பையும் இன்று இல்லறம் ஏற்றிருக்கும் மணமக்கள் தன்னகத்தே கொண்டு எல்லா வளமும் பெற்ற பல்லாண்டு காலம் வாழ்ந்து சிறக்க வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன்.இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்