முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை மாவட்ட வளர்ச்சி பணி: சகாயம் ஆய்வு

புதன்கிழமை, 21 மார்ச் 2012      தமிழகம்
Image Unavailable

 

மதுரை, மார்ச்.- 21 -மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியத்தில் மாத்தூர் ஊராட்சியில் ஊரக கட்டிடங்கள் பராமரிப்புத் தி;ட்டத்தின் கீழ் ரூ.1 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்றுள்ள மகளிர் சுகாதார வளாகம் பராமரிப்பு பணிகளையும், வெள்ளியங்குன்றம் ஊராட்சியில் இந்திரா நினைவு குடியிருப்புத்திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் தலா ரூ.1 இலட்சம் மதிப்பிலான தொகுப்பு வீடுகளின் கட்டிடப்பணிகளையும்,  மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் திட்டங்களுள் ஒன்றான பசுமைவீடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் தலா ரூ.1.80 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் வீடுகளின் கட்டிடப்பணிகளையும், மாவட்ட ஆட்சித் தலைவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் சத்திரப்பட்டி ஊராட்சியில் ரூ.5 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்றுவரும் பணிகளையும், ஊரக கட்டிடங்கள் பராமரிப்புத் தி;ட்டத்தின் கீழ் ரூ.80 ஆயிரம் மதிப்பீட்டில் நடைபெற்றுள்ள மகளிர் சுகாதார வளாகம் பராமரிப்பு பணிகளையும், அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் பாறைப்பட்டி ஊராட்சியில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் திட்டங்களுள் ஒன்றான பசுமைவீடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் தலா ரூ.1.80 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் வீடுகளின் கட்டிடப்பணிகளையும், பாலமேடு ஊராட்சியில் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.3 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பயணியர் நிழற்குடைக்கான பணிகளையும், டி.மேட்டுப்பட்டி ஊராட்சியில் தாய் திட்டத்தின் கீழ் நாயக்கன்பட்டியில் ரூ.3 இலட்சம் மதிப்பீட்டிலும், எல்லையுரிைல் ரூ.2.20 இலட்சம் மதிப்பீட்டிலும் சுடுகாடுகளில் நடைபெற்றுவரும் அடிப்படை வசதிக்கான பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.  வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் குட்லாடம்பட்டி ஊராட்சியில் இந்திரா நினைவு குடியிருப்புத்திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் தலா ரூ.1 இலட்சம் மதிப்பிலான தொகுப்பு வீடுகளின் கட்டிடப்பணிகளையும், மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் திட்டங்களுள் ஒன்றான பசுமைவீடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் தலா ரூ.1.80 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் வீடுகளின் கட்டிடப்பணிகளையும், நபார்டு திட்டத்தின் கீழ் குட்லாடம்பட்டியிலிருந்து, குட்லாடம்பட்டி அருவிக்கு ரூ.39 இலட்சம் மதிப்பீட்டில் 5 கி.மீ தொலைவிற்கு அமைக்கப்பட்டு வரும் சாலைப்பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.ஆய்வின் இறுதியில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது:மதுரை மாவட்டத்தில் மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு திட்டங்களின் மூலம் ஊரக வளர்ச்சிப் பணிகள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு கிராமப்புறங்கள் மேம்படுத்தப்பட்டு வருகிறது.  மதுரை மாவட்டத்தை தென்னிந்தியாவிலேயே சிறந்த சுற்றுலா தளமாக மாற்ற அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ள வேண்டும்.  மதுரை நகரம் 3000 ஆண்டுகள் பழமை வாய்ந்த நகரம் ஆகும்.  வெளிநாட்டு சுற்றுலாபயணிகள் அதிக அளவில் இங்கு வந்து நகரைப் பற்றி சொல்லி பெருமைப்படுகிறார்கள்.  எனவே மதுரையை சுற்றுலாத்தளமாக மேம்படுத்த ரூ.15 கோடி மதிப்பீட்டில் திட்டம் தீட்டப்பட்டு அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது.  இத்திட்டத்தில் சாலை வசதி, மேம்பாலங்கள், புங்ைகாக்கள், கழிப்பறை வசதி, தெரு விளக்குகள் அமைக்கப்படும்.  நீராதாராங்களை பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.  குறிப்பாக வண்டியுர்ை கண்மாயை ஆழப்படுத்தி சுற்றுலாப்பயணிகளை கவரும் வகையில் படகு சவாரி விடப்படும்.  கண்மாய் நடுவில் ஒரு தீவு போன்ற தோற்றம் அமைக்கப்பட்டு கண்மாயின் கரைகளை அழகுப்படுத்தி பாரம்பரிய நடைபாதை அமைக்கப்படும்.  சாத்தையார் அணையில் கரைகள் அழகுப்படுத்தப்பட்டு படகு சவாரி விட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.  

தமிழர்களின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் சிலைகள் வைக்கப்படும்.  மாரியம்மன் கோயில் தெப்பக்குளத்தில் நிரந்தரமாக தண்ணீர் தேக்கி வைக்கப்படும்.  மத்தியிலுள்ள மைய மண்டபத்தில் அலங்கார விளக்குகள் அமைத்து அழகுபடுத்தப்பட்டு பாதுகாப்பு உறுதிசெய்யப்பட்ட பின் இரவு 7.00 மணி வரை படகு சவாரி விட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.  உசிலம்பட்டி அருகிலுள்ள பெருங்காமநல்லூரில் 1920ம்ஆண்டு வெள்ளையர்களின் கைரேகை சட்டத்தை எதிர்த்து போராடிய 16 நபர்கள் சுட்டுக்கொல்லப்பட்டார்கள்.  இந்த சம்பவம் ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு இணையான சம்பவம்.  இதை நினைவு கூறும் வகையில் இச்சம்பவம் நடந்த இடம் சுற்றுலாத்தளமாக மேம்படுத்தப்படும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்