முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

122 ஜி லைசென்ஸ் ரத்து: செல்போன் சேவை பாதிக்கும்

வெள்ளிக்கிழமை, 2 மார்ச் 2012      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, மார்ச். - 3 - தொலைத்தொடர்பு துறை மந்திரியாக ராசா இருந்த போது தவறான முறையில் 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்ததால் அரசுக்கு ரூ. 1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது. இது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் ஒதுக்கீட்டுக்காக வழங்கப்பட்ட 122 உரிமங்களையும் ரத்து செய்து கோர்ட் உத்தரவிட்டது.  மேலும் இந்த உரிமங்களை எந்த முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டதோ அதே நடைமுறையில் புதிய முறையில் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் இந்த புதிய ஒதுக்கீடு தொடர்பான நடவடிக்கைகளை 4 மாதங்களுக்குள் எடுக்க வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட் மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக மத்திய அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது,  2 ஜி ஸ்பெக்ட்ரம் என்பது இயற்கை வளங்களில் ஒன்றாகும். அதன் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளில் ஜனாதிபதியிடம் ஆலோசனை கேட்பது வழக்கம். எனவே அவரிடம் ஸ்பெக்ட்ரம் ஏலம் பற்றி கலந்தறிய வேண்டியதிருக்கிறது. எனவே புதிய ஒதுக்கீடு வழங்குவதற்கு கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும். இல்லையெனில் நாடு முழுவதும் உள்ள 7 கோடி செல்போன் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படுவார்கள். புதிய ஒதுக்கீட்டு உரிமம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த நடவடிக்கைகள் முழுமை பெற 400 நாட்களாவது தேவைப்படும். எனவே கால அவகாசத்தை நீட்டித்து தர வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே 2 ஜி ஸ்பெக்ட்ரம் தொடர்பான 122 உரிமங்களை சுப்ரீம் கோர்ட் ரத்து செய்த தீர்ப்பின் விளைவு குறித்து சாக்கோ தலைமையிலான பாராளுமன்ற கூட்டுக்குழு நேற்று கூடி விவாதித்தது. மத்திய தொலைதொடர்பு துறை அமைச்சக அதிகாரிகளும் இதில் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்