முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாநிலங்களவை தேர்தலில் ஆதரவு இல்லை: மம்தா

திங்கட்கிழமை, 19 மார்ச் 2012      அரசியல்
Image Unavailable

 

கொல்கத்தா, மார்ச். - 19 - மாநிலங்களவை தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவு அளிக்கப் போவது இல்லை என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.  மேற்கு வங்கத்தில் கடந்த முறை மாநிலங்களவை தேர்தல் நடைபெற்ற போது காங்கிரசுக்கு ஒரு உறுப்பினர் பதவியை திரிணாமுல் அளித்தது. அதே போல இந்த முறையும் மேற்கு வங்கத்தில் திரிணாமுல் ஆதரவுடன் மாநிலங்களவை உறுப்பினரை பெறலாம் என்று காங்கிரஸ் எண்ணியிருந்தது. இந்நிலையில் மேற்கு வங்கத்தில் காலியாகும் 5 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளில் 4 இடங்களில் தனது கட்சியில் இருந்து வேட்பாளர்களை நிறுத்தி காங்கிரசுக்கு அதிர்ச்சி அளித்துள்ளார் மம்தா பானர்ஜி. மேற்கு வங்கம் உட்பட பல்வேறு மாநிலங்களில் காலியாகும் மாநிலங்களவை இடங்களுக்கு வரும் 30 ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.  இந்நிலையில் மேற்கு வங்க காங்கிரஸ் தலைவர் ஓ.பி. மிஸ்ரா, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் மம்தாவை கடுமையாக விமர்சித்துள்ளார். தேசிய கட்சியான காங்கிரசுடன் மாநிலத்தில் கூட்டணியில் இருக்கும் திரிணாமுல் காங்கிரஸ் மனம்போன போக்கில் முடிவுகளை எடுப்பதை ஏற்றுக் கொள்ளக் கூடாது. எனவே மாநிலங்களவை தேர்தலில் காங்கிரஸ் சார்பிலும் வேட்பாளர்களை நிறுத்த வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் நாம் அவரிடம் சரணடைந்து விட்டது போலாகி விடும் என்று அவர் கூறியுள்ளார்.  மத்திய அரசுக்கும், காங்கிரசுக்கும் பல்வேறு விஷயங்களில் மம்தா எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். அவர் மத்திய அரசுக்கு ஆதரவாக பேசியதை விட அதன் பல்வேறு முடிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்ததே அதிகம். கூட்டணியில் இருக்கும் ஒரு கட்சியே பல்வேறு விஷயங்களில் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளுடன் கைகோர்த்து செயல்படுவது காங்கிரசுக்கு ஏற்கனவே தலைவலியை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்