முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கும்பகோணத்தில் மூ.மு.க ஒன்றிய செயலாளர் படுகொலை

சனிக்கிழமை, 24 மார்ச் 2012      தமிழகம்
Image Unavailable

 

கும்பகோணம்மார்ச் 24 -  கும்பகோணம் அருகிலுள்ள தாராசுரத்தைச் சேர்ந்த தங்கராஜ் இவரது மகன் லெட்சுமனன் (வயது 35), இவர் மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தின் ஒன்றிய செயலாளராக பொறுப்பில் உள்ளார். இந்நிலையில் வியாழக்கிழமை இரவு ஒன்றிய அலுவலகத்தில் அமர்ந்திருந்தபோது அடையாளம் தெரியாத மர்ம கும்பல் ஒன்று அலுவலகத்தின் உள்ளேயே புகுந்து சரமாரியாக வெட்டி படுகொலை செய்தது. கொலை செய்யப்பட்ட லெட்சுமனன் மீது ஏற்கனவே பல வழக்குகள் உள்ளன. 2009ஆம் ஆண்டு தாராசுரம் மார்கெட் பகுதியில் வெட்டிக் கொலை செய்யப்பட்;ட கேண்டீன் செந்தில் வழக்கில் தற்போது கொலை செய்யப்பட்ட லெட்சுமனனுக்கு தொடர்பு உள்ளது. இந்த முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்று ஒரு கருத்து உள்ளது. இது குறித்து கும்பகோணம் தாலுக்கா காவல் நிலையத்தினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். நேற்று முன்தினம்  இரவு நடந்த கொலை சம்பவ இடத்திற்கு தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அணில்குமார்கிரி நேரில் பார்வையிட்டு தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளார். அரசு மருத்துவமனையில் குற்றவாளியை கைது செய்யும் வரை பிரேதத்தை வாங்க மறுத்த மூ.மு.கவினர் தகவலறிந்து மூ.மு.க நிறுவனத்தலைவர் ஸ்ரீதர்வாண்டையார் குற்றவாளியை கைது செய்ய வேண்டும். என்று சாலை மறியல் செய்தனர்.  இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கும்பகோணம் அரசு தலைமை மருத்துவமணையிலிருந்து லெட்சுமணனின்  உடலை தாராசுரம் அவரது வீட்டிற்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லும்போது கும்பகோணத்தில் கடைவீதிகளில் உள்ள வணிக நிறுவனங்களை மு.மு.க தொண்டர்கள் தாக்கினார்கள் இதனால் வணிகர்களுக்கும் மு.மு.க தொண்டர்களுக்கும் மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது. உடனே கும்பகோணம் காவல்துறை தடியடி நடத்தி மு.மு.க தொண்டர்களை கலைத்தனர். 

வணிகர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்கு வணிகர்கள் அனைவரும் ஒன்றுசோர்ந்து போராட்டம் நடத்தினர். உடனே கும்பகோணம் காவல்துறையினர் தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தினர். 

கும்பகோணத்தில் மு.மு.க ஒன்றிய செயலாளர் கொலையால் நேற்று நகர் முழுவதும் பதட்டமாகவே காணப்பட்டது. அதிக அளவில் போலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்