முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குஜராத் சட்டசபையில் 3-வது நாளாக அமளி

சனிக்கிழமை, 24 மார்ச் 2012      அரசியல்
Image Unavailable

 

காந்திநகர், மார்ச் 24 - ஆபாச படம் பார்த்த 2 பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களை டிஸ்மிஸ் செய்யக்கோரி நேற்று 3 வது நாளாக காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் சபை ஒத்திவைக்கப்பட்டது. குஜராத் சட்டசபையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இரண்டு பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் ஐபாடு செல்போனில் ஆபாச படம் பார்த்ததாக புகார் கூறப்பட்டது. இதையடுத்து அந்த இரு எம்.எல்.ஏ.க்களையும் டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி வலியுறுத்திவருகிறது. கடந்த 2 தினங்களாக இந்த கோரிக்கையை வலியுறுத்தி சட்டசபையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து சபை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. நேற்று 3 வது நாளாக இதே கோரிக்கையை வலியுறுத்தி காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் குஜராத் சட்டசபையில் கடும் அமளியில் ஈடுபட்டனர். நேற்று காலை சபை கூடியதுமே காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகரின் இருக்கையை நோக்கி கோஷம் எழுப்பிக்கொண்டே சென்றனர். டிஸ்மிஸ் செய், டிஸ்மிஸ் செய் ஆபாசப் படம் பார்த்த எம்.எல்.ஏக்களை டிஸ்மிஸ் செய் என்று அவர்கள் கோஷங்களை எழுப்பினார்கள். அப்போது அவர்கள் தங்கள் கைகளில் வைதிருந்த பேப்பர்களை தூக்கியெறிந்து காற்றில் பறக்கவிட்டனர். இதனால் சபையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. கேள்வி நேரத்தை நடத்த விடுங்கள் என்று சபாநாயகர் கண்பட் வாசவா பலமுறை கேட்டுக்கொண்டார். ஆனால் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்து ரகளையில் ஈடுபட்டனர். கேள்வி நேரத்தை நடத்த முடியாத நிலை ஏற்படவே, சபாநாயகர் கண்பட் வாசவா சபையை ஒத்திவைத்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்