முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சங்கரராமன் வழக்கு: ஜெயேந்திரர் ஆஜராக உத்தரவு

சனிக்கிழமை, 31 மார்ச் 2012      அரசியல்
Image Unavailable

 

புதுச்சேரி, மார்ச்.31 - சங்கரராமன் கொலை வழக்கு விசாரணை புதுவை கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இதில் விஜயேந்திரர், ஜெயேந்திரர் உள்பட 24 பேரும் வருகிற 9-ந் தேதி கோர்ட்டில் ஆஜராக உத்தரவிடப்பட்டது. காஞ்சி வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் கடந்த 2004-ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு விசாரணை புதுவை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அதனை நீதிபதி ராமசாமி விசாரித்து வந்தார். 

இந்த நிலையில் நீதிபதி ராமசாமி ஜெயேந்திர ருடன் செல்போனில் பேசியதாக ஆடியோ டேப் வெளியானது. இதையடுத்து சென்னை ஜகோர்ட்டில் வக்கீல் ஒருவர் பொதுநல வழக்கு தொடர்ந்தார். நீதிபதி ராமசாமி இந்த வழக்கை விசாரிக்க கூடாது என்று அவர் அந்த மனுவில் கூறியிருந்தார். 

இதன் மீது சென்னை உயர்நீதிமன்றம் விசாரணை நடத்தியது. இதையடுத்து அந்த ஆடியோ டேப் உண்மையானது தானா? என்று கண்டறிய ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

அதன் பிறகு கடந்த சில வாரங்களுக்கு முன்பு நீதிபதி ராமசாமி புதுவையில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு சி.எஸ். முருகன் என்பவரை புதிய நீதிபதியாக நியமித்து சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது. 

மேலும் சங்கரராமன் கொலை வழக்கை சி.எஸ். முருகன் விசாரிக்கவும் சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியது. 

இந்த நிலையில் நேற்று புதுவை கோர்ட்டில் நீதிபதி சி.எஸ். முருகன் முன்னிலையில் சங்கரராமன் கொலை வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. சுந்தரேச அய்யர், ரகு உள்பட குற்றம் சாட்டப்பட்ட 5 பேர் கோர்ட்டில் ஆஜர் ஆனார்கள். 

வழக்கை விசாரித்த நீதிபதி முருகன், வழக்கை வருகிற 9-ந் தேதிக்கு தள்ளி வைத்தார். மேலும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்பட 24 பேரும் அன்று கோர்ட்டில் ஆஜர் ஆகவும் அவர் உத்தரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்