முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடத்தப்பட்ட எம்.எல்.ஏ., இத்தாலியரை விடுவிக்க மாவோயிஸ்ட்கள் இறுதிக்கெடு

செவ்வாய்க்கிழமை, 3 ஏப்ரல் 2012      இந்தியா
Image Unavailable

புவனேஸ்வர்,ஏப்.- 4 - கடத்தப்பட்ட ஆளும் கட்சி எம்.எல்.ஏ.ஜினாவையும் இத்தாலியரையும் விடுவிக்க வேண்டும் என்றால் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் மாவோயிட்களில் 6 பேரை விடுவிக்கும் தேதியை நாளைக்குள் ஒரிசா அரசு அறிவிக்க வேண்டும் என்று மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் கெடு விதித்துள்ளனர். ஒரிசாவில் இத்தாலியர் 2 பேர்களையும் ஆளும் பிஜூ ஜனதாதளம் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.ஜினா ஹிகாகாவையும் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் கடத்தி சென்று பிணையக்கைதிகளாக வைத்துள்ளனர். கடத்தப்பட்டவர்களை விடுவிக்க மாவோயிஸ்ட் தீவிரவாத இயக்க பிரதிநிதிகளுடன் அரசு பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் கடத்தப்பட்ட இத்தாலியர்களில் ஒருவரை மாவோயிஸ்ட்கள் விடுவித்துவிட்டனர். மற்றொரு இத்தாலியரையும் எம்.எல்.ஏ.வை.யும் விடுவிக்க தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பேச்சுவார்த்தையின்போது மீதமுள்ள 2 பேரையும் விடுவிக்க வேண்டும் என்றால் ஏற்கனவே போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களில் 7 பேர்களை விடுவிக்க வேண்டும் என்று மாவோயிஸ்ட்டுகள் கோரிக்கை வைத்தனர். மேலும் தங்களுடைய கோரிக்கைகளை வலியுறுத்தி இரண்டு ஆடியோ கேட்களை பத்திரிகைகளுக்கும் தொலைகாட்சிகளுக்கும் கொடுத்துள்ளனர். அதில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் மாவோயிஸ்ட்களில் 7 பேர்களை எந்த தேதியில் அரசு விடுவிக்கும் என்பதை நாளைக்குள் தெரிவிக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளனர். 2 பேர்களை கடத்திச்சென்ற சி.பி.ஐ. மாவோயிஸ்ட் ஒரிசா மாநில பிரிவானது இந்த இரண்டு ஆடியோ கேசட்களையும் வெளியிட்டுள்ளது. அரசானது ஏதாவது தந்துமந்து வேளையில் ஈடுபட்டால் பயங்கர விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று மாவோயிஸ்ட் கமிட்டி செயலாளர் சப்யா சச்சி பாண்டா கடுமையாக எச்சரித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்