முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பஞ்சாப் 7விக்கெட் வித்தியாசத்தில் புனே வாரியர்ஸ் அணியை வீழ்த்தியது

சனிக்கிழமை, 14 ஏப்ரல் 2012      விளையாட்டு
Image Unavailable

புனே, ஏப். - 14 -  .பி.எல். 20 -க்கு 20 போட்டியில் மொகாலியில் நடந்த லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் புனே வாரி யர்ஸ் அணியை வீழ்த்தியது.  ஞ்சாப் அணி தரப்பில், ஷான் மார்ஷ் அதிரடியாக ஆடி அரை சதம் அடித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத் துச் சென்றார். அவருக்கு பக்கபலமாக கேப்டன் கில்கிறிஸ்ட் மற்றும் பி. சாவ் லா ஆகியோர் ஆடினர்.  ன்னதாக பெளலிங்கின் போது, மஸ் கரன் ஹாஸ் சிறப்பாக பந்து வீசி 5 முக் கிய விக்கெட்டைக் கைப்பற்றினார். அவருக்கு ஆதரவாக ஹர்மீத்சிங் மற்று ம் பி. சாவ்லா ஆகியோர் பந்து வீசினர்.  .பி.எல். 20 -க்கு 20 போட்டியின் 14 - வது லீக் ஆட்டம் மொகாலி நகரில் உள்ள பஞ்சாப் கிரிக்கெட் சங்க கட்டிட த்தில் நடந்தது. இதில் கேப்டன் ஆடம் கில்கிறிஸ்ட் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், கேப்டன் கங்குலி தலைமையிலான புனே வாரி யர்ஸ் அணியும் மோதின.  ந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த புனே வாரியர்ஸ் அணி 19 ஓவரி ல் அனைத்து விக்கெட்டையும் இழந்து 115 ரன்னை எடுத்தது. அந்த அணி சார் பில் ஒரு வீரர் கூட அரை சதத்தை தாண்டவில்லை. மன்ஹஸ் அதிகபட்சமாக, 28 பந்தில் 31 ரன்னை எடுத்தார். தவிர, கங்குலி 16 ரன்னையும், உத்தப்பா 17 ரன்னையும், டி. ஸ்மித் 13 ரன்னையும் எடுத்தனர். பஞ்சாப் அணி தரப்பில், மஸ்கரன்ஹா ஸ் அபாரமாக பந்து வீசி 25 ரன்னைக் கொடுத்து 5 விக்கெட் எடுத்தார். தவிர, ஹர்மீத்சிங் 2 விக்கெட்டையும், பி. சா வ்லா 1 விக்கெட்டும் எடுத்தனர்.  பஞ்சாப் அணி 116 ரன்னை எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக்கை புனே அணி வைத்தது. அடுத்து களம் இறங்கிய அந்த அணி 17.4 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 116 ரன்னை எடுத்தது.  இதனால் பஞ்சாப் அணி இந்த லீக் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தி ல் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் அந்த அணிக்கு 2 புள்ளிகள் கிடைத்தது. இது அந்த அணிக்கு இந்தத் தொடரில் முதலாவது வெற்றியாகும்.  பஞ்சாப் அணி சார்பில், ஷான் மார்ஷ் அதிரடியாக ஆடி 54 பந்தில் 64 ரன்னை எடுத்தார். தவிர, கேப்டன் கில்கிறிஸ்ட் 21 ரன்னையும், பி. சாவ்லா 21 ரன்னையும் எடுத்தனர்.  புனே அணி தரப்பில், முன்னணி வீரரா  ன திண்டா 18 ரன்னைக் கொடுத்து 1 விக்கெட் எடுத்தார். தவிர, மேத்யூஸ் மற்றும் ரோகித்சர்மா ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர். இந்தப் போட்டி யின் ஆட்டநாயகனாக மஸ்கரன்ஹாஸ் தேர்வு செய்யப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்