முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொல்கத்தா வெறறி: சுழற்பந்து வீச்சாளர்களுக்கு பாராட்டு

ஞாயிற்றுக்கிழமை, 15 ஏப்ரல் 2012      விளையாட்டு
Image Unavailable

 

கொல்கத்தா, ஏப். 15 - ஐ.பி.எல். லீக் ஆட்டத்தில் கொல்கத் தா நைட் ரைடர்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை தோற்கடித்தது. இது அந்த அணிக்கு 2-வது வெற்றியாகும். கொல்கத்தா அணியின் வெற்றியில் சுழ ற் பந்து வீச்சாளர்கள் முக்கிய பங்கு வகித்தனர். அவர்களுக்கு கேப்டன் கா ம்பீர் பாராட்டு தெரிவித்து இருக்கிறார். பந்துவீச்சுக்கு சாதகமான இந்த ஆடுகளத்தில் முதலில் விளையாடிய ராஜஸ் தான் அணியால் 5 விக்கெட் இழப்பிற் கு 131 ரன்னை மட்டுமே எடுக்க முடிந் தது. 

ராஜஸ்தான் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான ஓவாஷிஸ் ஷா அதிக பட்சமாக, 31 ரன்னும், கேப்டன் டிரா விட் 28 ரன்னும் எடுத்தனர். ஷாகிப் அல் ஹசன் 3 விக்கெட்டும், நரைன் 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள். 

பின்னர் ஆடிய கொல்கத்தா அணி 19.2 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 137 ரன் னை எடுத்தது. காலிஸ் 31 ரன்னும், பிஸ்லா 29 ரன்னும், ஷாகிப் அல் ஹச ன் 10 பந்தில் 16 ரன்னும் எடுத்தனர். 

இந்த வெற்றி மூலம் கொல்கத்தா அணி ராஜஸ்தான் அணியிடம் ஏற்கனவே தோற்றதற்கு சரியான பதிலடி கொடுத் து விட்டது. 

இந்த வெற்றி குறித்து கொல்கத்தா அணியின் கேப்டன் காம்பீர் கூறியதாவ து - இந்தப் போட்டியில் ஷாகிப் அல் ஹசன் மற்றும் நரைன் ஆகியோரரது சுழற் பந்து வீச்சு அபாரமாக இருந்தது. 

காலிஸ் மற்றும் மனோஜ் திவாரியின் பேட்டிங் சிறப்பாக இருந்தது. இந்த வெற்றி மிகுந்த மகிழ்ச்சி தருகிறது. சுழற் பந்து வீரர்களால் வெற்றி கிடைத்தது. இவ்வாறு அவர் கூறினார். 

தோல்வி குறித்து ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் டிராவிட் கூறியதாவது - 131 ரன் என்பது நல்ல ஸ்கோர் தான். நாங்கள் தொடக்கத்திலேயே விக்கெட்டைக் கைப்பற்றாமல் விட்டு விட்டோம். 

தொடர்ந்து 2 ஆட்டங்களில் தோற்றதா ல் நாங்கள் கவலைப்படவில்லை. மீண்டும் எழுச்சி பெறுவோம். வெற்றியை ஈட்டுவோம். இவ்வாறு அவர் கூறி னார். 

ஆட்டநாயகன் விருது பெற்ற கொல்க த்தா அணியின் ஆல்ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன் கூறியதாவது - தொடக்கத் திலேயே விக்கெட் கைப்பற்றியதால் எனது நம்பிக்கை அதிகரித்தது. 

நேர்த்தியாக பந்து வீசியதால் விக்கெட் கைப்பற்ற முடிந்தது. பேட்டிங் செய்த போது, பவுண்டரி அடித்தால் நல்லது என்று கருதிய போது, சிக்சர் அடித்தது முக்கிய பங்கு வகித்தது என்றார் அவர். 

கொல்கத்தா அணி இதுவரை 4 ஆட்டத் தில் பங்கேற்று 2 வெறறி 2 தோல்வியு டன் 4 புள்ளிகள் பெற்று உள்ளது. 

அந்த அணி 5-வது போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியுடன் இன்று மோத இருக்கிறது. இதே போல இதே புள்ளியில் இருக்கும் ராஜஸ்தான் அணி இன்று இரவு 8 மணிக்கு பெங்களூர் அணியுடன் மோதுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்