முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உ.பி.யில் என்ஜினீயரிங், மருத்துவ கல்லூரிகளில் மாணவிகளுக்கு இலவசக்கல்வி

திங்கட்கிழமை, 16 ஏப்ரல் 2012      இந்தியா
Image Unavailable

லக்னோ, ஏப். - 16 - உத்தரபிரதேசத்தில் அரசு பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் மாணவிகளுக்கு இலவச கல்வி வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் அதிரடியாக அறிவித்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற 5 மாநில சட்டமன்றத் தேர்தலில் உத்தரபிரதேசத்தில் அதிரடியாக ஆட்சியைக் கைப்பற்றி பெரும் சாதனை நிகழ்த்தியது முலாயம்சிங் யாதவின்  சமாஜ்வாடி கட்சி. இந்த இமாலய வெற்றிக்கு முலாயம்சிங் யாதவின் மகன் 38 வயதேயான அகிலேஷ் யாதவே மிகப்பெரும் காரணமாக இருந்தார். இதையடுத்து அவர் உ.பி.யின் முதல்வராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். முதல்வரானவுடன் பல்வேறு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளை அதிரடியாக மாற்றினார்.  இந்நிலையில் லக்னோ நகரில் நடந்த  கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அகிலேஷ் யாதவ், அரசு பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் வரும் கல்வியாண்டில் மாணவிகளுக்கு இலவசமாக கல்வி அளிக்கப்படும் என்று அதிரடியாக அறிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில் முக்கிய நகரங்களில் அரசு சார்பில் தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் உருவாக்கப்படும். இளைஞர்கள் அதிக வேலைவாய்ப்பை பெறும் வகையில் புதிதாக தொழிற்சாலைகள் தொடங்க அரசு தேவையான வசதிகளை செய்துகொடுக்கும் . ஆங்கில மொழிக்கும், கணினிக்கும் சமாஜ்வாடி கட்சி எதிரி என்று பொதுமக்களில் சிலர் தவறாக நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். இந்த எண்ணத்தை போக்க மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக கணினிகளும் கால்குலேட்டர்களும் வழங்கப்படுகின்றன என்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்