முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரணாப்புடன் ரிசர்வ் வங்கி கவர்னர் சுப்பாராவ் சந்திப்பு

திங்கட்கிழமை, 16 ஏப்ரல் 2012      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, ஏப். - 16 - ரிசர்வ் வங்கி கவர்னர் சுப்பாராவ், மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியை சந்தித்து எதிர்வரும் நிதி கொள்கை அறிவிப்பு பற்றி விவாதித்தார்.  வரும் 17 ம் தேதி இந்த ஆண்டுக்கான நிதி கொள்கையை ரிசர்வ் வங்கி அறிவிக்கவிருக்கிறது. இந்த நிலையில் மத்திய நிதியமைச்சரை ரிசர்வ் வங்கி கவர்னர் சந்திப்பது வழக்கம். பொருளாதார தேக்கத்தை போக்குவதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து இருவரும் விவாதித்தனர். 2010 ம் ஆண்டிலும், 2011 ம் ஆண்டிலும் பெரும்பாலான காலம் பணவீக்கம் மிக அதிகமாக இருந்து வந்ததால் நிதிகொள்கை மிக இறுக்கமான சூழலில் வைக்கப்பட்டிருந்தது. 2010 மார்ச் முதல் 13 முறை வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து கடந்த பிப்ரவரியில் பணவீக்கம் 6.95 ஆக குறைந்தது.  ஆயினும் இந்திய நிறுவனங்கள் வட்டி விகிதத்தை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளன. பொருளாதார தேக்கத்தில் இருந்து வெளிவர வட்டி விகிதம் குறைக்கப்பட வேண்டும் என்று பல்வேறு தொழில் நிறுவனங்களும் தொழிலக கூட்டமைப்புகளும் நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியை சந்தித்து கோரிக்கை வைத்தன.  2011 - 12 நிதி ஆண்டுக்கான பொருளாதார வளர்ச்சி 6.9 சதவீதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2010 - 11 நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 8.4 சதவீதமாக இருந்தது. இப்போது நடைபெறவிருக்கும் நிதி கொள்கை அறிவிப்பால் நடப்பு நிதி ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 7.5 சதவீதமாக உயரும் என்று கருதப்பட்டது. 2011 ஏப்ரல் முதல் 2012 பிப்ரவரி வரை இந்திய தொழிலகங்களின் வளர்ச்சி குறியீடு 3.5 சதவீதமாக இருந்தது. இதற்கு முந்தைய நிதி ஆண்டின் இதே காலக்கட்டத்தில் தொழிலகங்களின் வளர்ச்சி குறியீடு 8.1 சதவீதமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்