முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சமயபுரத்தில் நேற்று நடந்தது மாரியம்மன் கோவில் தேரோட்டம்

புதன்கிழமை, 18 ஏப்ரல் 2012      ஆன்மிகம்
Image Unavailable

திருச்சி, ஏப்.- 17- சமபுரம் மாரியம்மன் கோவிலில் சித்திரை தேரோட்டம் நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருச்சியை அடுத்துள்ள சமயபுரம் மாரியம்மன் கோவில் தமிழகத்தில் உள்ள சக்தி தளங்களில் முக்கியமானதாகும். சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் மாசிமாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை nullச்சொரிதல் விழாவும், சித்திரை மாதம் முதல் செவ்வாய்க்கிழமை தேரோட்டமும் நடைபெறும். இந்த ஆண்டு கடந்த மார்ச் மாதம் 11ந் தேதி nullச்சொரிதல் விழா தொடங்கியது. விழா தொடர்ந்து 28 நாட்கள் நடைபெற்றது.  nullச்சொரிதல் விழா நிறைவடைந்ததைத் தொடர்ந்து கடந்த 8ந் தேதி சித்திரை திருவிழா தொடங்கியது. அன்று அதிகாலை உற்சவ அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடைபெற்றது. அம்மன் முன்னிலையில் கொடி மரத்தில் கொடி ஏற்றப்பட்டது. அன்று இரவு கேடயத்தில் புறப்பட்டு சுவாமி வீதிவுலா நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடந்தது.
இந்த தேரோட்டத்தில் திருச்சி மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல்லாயிரகனக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். சமயபுரம் மாரியம்மனுக்கு வேண்டிக்கொண்ட ஆயிரக்கனக்கான பக்தர்கள் பாத யாத்திரையாக வந்தனர். ஏராளமான பக்தர்கள் சுமார் 10 கி.மீ, தொலைவில் இருந்தே மேளதாளத்துடன் கைகளில் அக்னிச்சட்டி ஏந்தி ஊர்வலமாக வந்து அம்மனை வலம் வந்து வழிபட்டு, தங்களது நன்றியை மகமாயிக்கு காணிக்கையாக்கினர்.
இது மட்டுமின்றி ஏராளமான பக்தர்கள் மாவிளக்கு எடுத்து தங்கள் பிராத்தனைகளை நிறைவேற்றினர். தத்துகொடுக்கும் பிரார்த்தனையின் போது சிலர் குழந்தைகளை அர்ச்சகர் மூலம் அம்மனின் மடியில் வைத்தும் வாங்கி பிராத்தனை செய்தனர். பல்வேறு வழிகளில் பக்தர்கள் நேர்த்திக்கடனை நிவர்த்தி செய்தனர். தேர்திருவிழாவில் பல்லாயிரக்கனக்கானோர் குவிந்ததால் சமயபுரம் பகுதியே விழாக்கோலம் nullண்டது. விழாவுக்காக ஆங்காள்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து பல தரப்பினர் குடி தண்ணீர், nullர்மோர், வழங்கினர். பல இடங்களில் அன்னதானம் வழங்கப்பட்டது.
விழாவையொட்டி பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. சிறப்பு பஸ்கள் தொடர்ந்து இயக்கப்பட்டது வந்தது. தேரோட்டத்தையொட்டி நேற்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டிருந்ததால் கூட்டம் அதிகமாக இருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்