முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கே.எஸ்.ரவிக்குமார் மகள் திருமணம் சென்னையில் நடக்கிறது

வெள்ளிக்கிழமை, 20 ஏப்ரல் 2012      சினிமா
Image Unavailable

சென்னை, ஏப்.20 - தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் கே.எஸ்.ரவிக்குமார் இவரின் மூத்த மகள் திருமணம் சென்னையில் நடக்கவுள்ளது. புரியாத புதிர், படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் கே.எஸ்.ரவிக்குமார். கடந்த 30 ஆண்டுகளாக சினிமாவில் இருந்து வருகிறார். முன்னணி இயக்குநர்களில் ஒருவராக திகழ்வதோடு,  பல வெற்றி படங்களையும் கொடுத்திருக்கிறார். ரஜினி, கமல் போன்ற நடிகர்களை வைத்து படம் இயக்கியவர். இந்நிலையில் கே.எஸ்.ரவிக்குமார் - கற்பகம் தம்பதிகளின் மகளாகிய ஜனனிக்கும், ரவிசேகர் - கமலாவதி தம்பதிகளின் மகனாகிய  ஆர்.சதிஷ்குமார் என்பவருக்கும் இருவீட்டாரின் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் நடக்கவுள்ளது. இந்த திருமணம் வருகிற மே மாதம் 3.5.12 அன்று வியாழக்கிழமை காலை 10.30 மணிமுதல் 12.00 மணிக்குள் நடக்கவுள்ளது. திருமணம் சென்னை சாந்தோம் ஹைரோடு எம்.ஆர்.சி நகரிலுள்ள மேயர் ராமநாதன் செட்டியார் திருமண மகாலில் நடைபெறுகிறது. அன்றைய தினம் மாலை 7.00 மணிமுதல் இரவு 9.00 மணிவரை வரவேற்பு நடைபெறுகிறது. இந்த திருமணம் நிகழ்ச்சியில் திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் மற்றும் நடிகர், நடிகைகள் திரளாக கலந்துக் கொண்டு மனமக்களை  வாழ்த்த உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago