Idhayam Matrimony

முஸ்தபிசுர் ரஹ்மான் விடுவிப்பு எதிரொலி: வங்கதேசத்தில் ஐ.பி.எல். ஒளிபரப்பிற்கு தடை

திங்கட்கிழமை, 5 ஜனவரி 2026      விளையாட்டு
ipeela

டாக்கா, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மான் விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளை அந்நாட்டில் ஒளிபரப்புவதற்கும், இணையத்தில் ஸ்ட்ரீமிங் செய்வதற்கும் வங்கதேச அரசு காலவரையற்ற தடையை விதித்துள்ளது. மறுஅறிவிப்பு வரும்வரை இந்த தடை தொடரும் எனவும் தெரிவித்துள்ளது. 

பி.சி.சி.ஐ. உத்தரவு...

இதுதொடர்பாக அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "மார்ச் 26, 2026 முதல் நடைபெறவிருக்கும் இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.) கிரிக்கெட் போட்டிக்கான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிலிருந்து வங்காளதேச நட்சத்திர வீரர் முஸ்தபிசுர் ரஹ்மானை விலக்குவது தொடர்பாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடமிருந்து (பிசிசிஐ) ஒரு உத்தரவு வந்துள்ளது என்பதைத் தெரிவிக்கிறோம். 

அனைத்தையும்... 

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் இத்தகைய முடிவுக்குப் பின்னால் எந்த ஒரு நியாயமான காரணமும் இருப்பதாக தெரியவில்லை. இம்முடிவு வங்கதேச மக்களைப் புண்படுத்தி, துயரப்படுத்தி, வேதனைப்படுத்தியுள்ளது. இந்தச் சூழ்நிலையில், மறு அறிவிப்பு வரும் வரை, இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.) போட்டிகள் மற்றும் நிகழ்ச்சிகள் அனைத்தையும் ஒளிபரப்பு செய்வதை நிறுத்தும்படி அறிவுறுத்தல்களின்படி கோரிக்கை விடுக்கப்படுகிறது. இந்த உத்தரவு உரிய அதிகாரியின் ஒப்புதலுடன், பொது நலன் கருதியும் வெளியிடப்படுகிறது.

கோரிக்கை விடுத்தது...

வங்கதேசத்தில் இந்துக்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டு வரும்சூழலில் முஸ்தபிசுர் ரஹ்மான் விடுவிக்கப்பட வேண்டும் என இந்து அமைப்புகள் தெரிவித்தன. இதனைத்தொடர்ந்து பி.சி.சி.ஐ. அவரை விடுவிக்குமாறு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு கோரிக்கை விடுத்தது. அதன்பேரில் முஸ்தபிசுர் ஐ.பி.எல். போட்டிகளில் இருந்து விடுவிக்கப்பட்டார். இதனைத்தொடர்ந்து வங்கதேச அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து