முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பத்மநாபசுவாமி கோயில் நிர்வாகத்தை அரசு ஏற்காது

சனிக்கிழமை, 21 ஏப்ரல் 2012      ஆன்மிகம்
Image Unavailable

 

 

திருவனந்தபுரம், ஏப். 22  - திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் நிர்வாகத்தை கேரள மாநில அரசு ஏற்காது என்று அம்மாநில உள்துறை அமைச்சர் திருவாஞ்சூர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். உள்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பின் பத்மநாபசுவாமி கோயிலை சுற்றிப் பார்வையிட்ட அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,  திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் நிர்வாகத்தை மாநில அரசு ஏற்காது. அப்படியான ஒரு எண்ணம் கிடையாது. கோயிலுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டியது அரசின் கடமை. திருவாங்கூர் மன்னர் வம்சத்தின் பிரதிநிதிகள் அடங்கிய குழுதான் கோயில் நிர்வாகத்தை நிர்வகிக்கிறது. இதில் மாநில அரசு தலையிட்டு மேலும் புதிய சிக்கலை ஏற்படுத்த விரும்பவில்லை. மத்திய ரிசர்வ் வங்கிக்கு இணையாக பத்மநாபசுவாமி கோயிலுக்கு 24 மணி நேர பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. 

கமாண்டோ படையினருடன் மாநில போலீசார் இணைந்து கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்றார். திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் அறைகளில் லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பொக்கிஷங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு வருகிறது. பெருஞ்செல்வங்கள் குவிந்துள்ள இக்கோயில் திருவிதாங்கூர் மன்னர் வம்சத்தினர் எனும் தனியாரிடம் இருப்பதை விட மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதே சரியானது என்று பல்வேறு குரல்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில் திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினரை எதிர்த்து கொள்ள முடியாத மாநில அரசு கோயில் நிர்வாகத்தை ஏற்க முடியாது என்று கூறியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்