கும்பகோணத்தில் சரக்கு ரெயில் தடம் புரண்டதால் பரபரப்பு

திங்கட்கிழமை, 23 ஏப்ரல் 2012      தமிழகம்
Image Unavailable

 

கும்பகோணம் ஏப்ரல் - 23 - கும்பகோணம் நேற்று காலை நாகர்கோவில் இந்திய உணவுக் கழகத்திலிருந்து அரிசி ஏற்ற கும்பகோணம் ரெயில் நிலையத்திற்கு வந்த சரக்கு ரெயில் இணைப்பு பாதையிலிருந்து சரக்கு கையாளும் இடத்திற்கு ரெயில் பெட்டிகளை கொண்டு செல்வதற்காக ரெயில் இன்ஜினை பின்னோக்கி ஏற்றும் போது இருப்புப் பாதையில் அமைக்கப்பட்டிருந்த தடுப்புக் கட்டைகளையும், இரயில்வே சிக்னலையும் கவனிக்காமல் இயக்கயதால் இரயில் பாதையில் இருந்து  தடுப்புக் கட்டைகளை தாண்டி 100மீட்டர் தரையில இறங்கி நின்றது. எதிரில் செக்காங்கண்ணி பகுதி மக்கள் வசிப்பிடங்களும் கார் மெக்கானிக் செட்டும் இருக்கிறது. அடிக்கடி மக்கள் நடமாட்டம் உள்ள பகுதி இதனால் அதிர்ஷ்டவசமாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.  ரெயில் இன்ஜின் டிரைவர் பார்த்திபன் என்பவர் நாகர்கோவில் சந்திப்பிலிருந்து கும்பகோணம் ரெயில் நிலையம் வரை ஓட்டி வந்தார். இது குறித்து கும்பகோணம் ரெயில்வே போலீசாரும், கும்பகோணம் காவல் துறையும் வழக்கு பதிவு செய்து விபத்து நடந்தது தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். தமிழகத்திலேயே இதுவரை இது மாதரி தடம் புரண்ட சம்பவம் இல்லை. ஆதலால் இந்த சம்பவத்தை நேரில் பார்ப்பதற்கு மக்கள் பரபரப்பாக கூடினார்கள். திருச்சி ரெயில்வே மண்டலத்தை சார்ந்த கும்பகோணம் ரெயில் நிலையம் என்பதால் திருச்சி ரெயில்வே மண்டலத்தை சார்ந்த உயர் அதிகாரிகள் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு தப்பிச் சென்ற ரெயில் டிரைவரை தேடி வருகிறார்கள் மற்றும் சம்பவம் நடந்த பகுதியல் செக்காங்கண்ணி ரெயில்வே கேட் கீப்பரிடம் திருச்சி உயர் அதிகாரிகள் தீவிர விசாரணை நடததினார்கள்.

சம்பந்தபட்ட ஓட்டுனர் பார்த்திபன் மீது ரெயில்வே காவல் அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து  டிரைவரை தேடி வருகிறார்கள்.

 

ரெயில் படத்துக்கான விளக்கம் 

 

தடுப்புக் கட்டைகளை மோதி இரும்பு பாதையை விட்டு சுமார் 100மீட்டர் ஓடி நின்ற படம்

 

ரெயில் இன்ஜினின் பட்டை உடைந்திருக்கும் காட்சி

 

இணைப்பு ரெயில் பாதையில் விபத்து நடந்த பகுதியில் மெயின் லயனில் சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில் வந்த போது எடுத்த படம்

 

சம்பவத்தை மக்கள் பார்க்கும் போது எடுத்த படம்

 

ரெயில் பாதையில் இருந்;து ரெயில் இன்ஜின் சக்கரங்கள் உடைந்து நிற்கும் காட்சி

இதை ஷேர் செய்திடுங்கள்: