முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கார்த்திக் சிதம்பரத்திடம் விசாரணை நடத்த சாமி கோரிக்கை

செவ்வாய்க்கிழமை, 24 ஏப்ரல் 2012      ஊழல்
Image Unavailable

 

புதுடெல்லி, ஏப்.24 - 2 ஜி.ஊழல் விவகாரத்தில் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரத்திடம் விசாரணை நடத்த வேண்டும் என்று சி.பி.ஐ.க்கு சுப்பிரமணியம் சாமி கோரிக்கை விடுத்துள்ளார். ரூ. 1.76 லட்சம் கோடி 2 ஜி.ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசா உள்ளிட்ட பலர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் கருணாநிதியின் மகள் கனிமொழி உள்ளிட்ட சிலர் ஜாமீனில் வெளியே வந்துள்ளனர். ஆ.ராசா உள்ளிட்ட சிலர் இன்னமும் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 

2 ஜி.ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தையும் சேர்க்க வேண்டும் என்று ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சாமி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இந்த நிலையில் சுப்பிரமணியம் சாமி டெல்லியில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், 2 ஜி.ஸ்பெக்ட்ரம் ஊழல் பணத்தில் ஒரு பகுதி மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரத்திற்கும் சென்றுள்ளது என்றும், எனவே கார்த்திக் சிதம்பரத்திடம் விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து சி.பி.ஐ. இயக்குனருக்கு தான் ஒரு கடிதம் எழுதி இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். கார்த்திக் சிதம்பரத்திற்கு நாடு முழுவதும் 12 நிறுவனங்கள் உள்ளன என்றும் இந்த ஊழல் பணத்தில் கிடைத்த பணம் வெளிநாடுகளுக்கும் சென்றிருக்கிறது என்றும் அதற்கான ஆதாரங்கள் தன்னிடம் உள்ளன என்றம் எனவே இதுகுறித்து கார்த்திக் சிதம்பரத்திடம் உரிய விசாரணையை நடத்த வேண்டும் என்றும் தான் அந்த கடிதத்தில் கோரிக்கை விடுத்திருப்பதாக சுப்பிரமணியம் சாமி கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்