முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க. வேட்பாளர்கள் செல்லூர் கே.ராஜூ- ஏ.கே.போஸ் ஓட்டு சேகரிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 27 மார்ச் 2011      அரசியல்
Image Unavailable

 

மதுரை,- 27 - மதுரையில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் செல்லூர் ராஜூ, ஏ.கே. போஸ் ஆகியோர் வீதி,வீதியாக சென்று வாக்கு சேகரித்தனர். இவர்களுக்கு பெண்கள் திரண்டு வந்து ஆதரவு தெரிவித்தனர். மதுரை மேற்கு தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் செல்லூர் ராஜூம், மதுரை வடக்கு தொகுதி அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டஏ.கே.போசும்  அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முதல் நகரின் முக்கிய பிரமுகர்களை சந்தித்து  ஆதரவு கேட்டனர். மேலும் கிறிஸ்தவ பேராயர்கள் பீட்டர் பெர்ணான்டோ, கிறிஸ்டோபர் ஆசீர் ஆகியோரை சந்தித்தும் ஆதரவு கேட்டனர். இதை தொடர்ந்து வாக்காளர்களை நேரடியாக சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர்.          ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். நேற்றுகாலை தெற்கு தொகுதி அதிமுக வேட்பாளர் செல்லூர் கே.ராஜூ மதுரை  ஜெய்ஹிந்த்புரம், சோலையழகுபுரம்,  பாரதியார்  தெரு உள்ளிட்ட  பகுதிகளில் வாக்கு சேகரித்தார். அப்போது வாக்காளர்களிடம் இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார். வீட்டுக்குள் இருந்த பெண்கள் வெளியில் வந்து இரட்டை இலை சின்னத்தை கைகளில் காட்டி தங்களது ஆதரவை தெரிவித்தனர்.  

மேலும் வயதான பெண்கள் செல்லூர் ராஜின் தலையில் கைவைத்து ஆசி வழங்கினர்.  

மேலும் தொகுதியில் உள்ள தெருக்களில்  செல்லூர் ராஜூ வீதி, வீதியாக நடந்து சென்று  ஓட்டு சேகரித்தார். வீடு, வீடாக சென்று வாக்கு சேகரித்த செல்லூர் ராஜூவை பெண்கள்ஆரத்தி எடுத்து வரவேற்றனர். தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள செல்லூர் ராஜூடன், முன்னாள் மாவட்ட செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா, மாநகராட்சி எதிர்கட்சி தலைவர் பெ.சாலைமுத்து, பகுதி கழக செயலாளர்கள் பூமிபாலகன், வி.கே.எஸ்.மாரிச்சாமி,இளைஞரணி செயலாளர் ராஜலிங்கம், மேற்கு தொகுதி செயலாளர் எஸ்.முருகேசன், மகளிரணி செயலாளர் பெ.இந்திராணி, வட்டசெயலாளர்கள் வீரணன், நாராயணன், மாநில  பொதுக்குழு உறுப்பினர்கள் வி.எஸ்.முத்துராமலிங்கம், எல்லீஸ்நகர் ஏ.இந்திரா, வட்ட இணைசெயலாளர் செந்தில் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

     மதுரை வடக்கு தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ஏ.கே.போஸ் தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். தொகுதி முழுவதும் அ.தி.மு.க.வினர் தீவிர பிரசாரம் செய்து ஓட்டு சேகரித்து வருகிறார்கள். வேட்பாளர் ஏ.கே.போஸ் புதூர், ஜவகர்புரம் பகுதியில் வீடு வீடாக சென்று ஓட்டு சேகரித்தார். ஏ.கே.போஸ் ஓட்டு கேட்க சென்றபோது பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். வேட்பாளருடன் எம்.ஜி.ஆர். மன்ற மாநில துணை செயலாளர் எம்.எஸ். பாண்டியன், தொகுதிகழக  செயலாளர் ரவிச்சந்திரன், இணைசெயலாளர்கள் வக்கீல் ஏ.பி.பாலசுப்பிரமணியம், செல்லூர் எம்.எஸ். சுப்பு, பகுதி செயலாளர்கள் ஜெயவேல், அண்ணாநகர் முருகன், வட்டச்செயலாளர்கள் ஆறுமுகம், எல்.ஏ.முத்து, ஏ.முத்துச்சாமி, எஸ்.போஸ், புதூர் கே.எம்.கண்ணன், கார்த்திக் முனியசாமி மற்றும் ஒச்சாத்தேவர் உள்பட நிர்வாகிகள் உடன் சென்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony