முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜப்பானில் நேற்று மீண்டும் நிலநடுக்கம்

செவ்வாய்க்கிழமை, 29 மார்ச் 2011      உலகம்
Image Unavailable

 

டோக்கியோ, மார்ச்.29 - ஜப்பானில் 6.5 ரிக்டர் அளவில் நேற்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டது. ஜப்பானில் கடந்த 11 ம் தேதி சக்திவாய்ந்த பூகம்பம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியால் கடும் சேதம் ஏற்பட்டது. சுமார் 27 ஆயிரம் பேர் பலியானார்கள். பூகம்பம் மற்றும் சுனாமி காரணமாக புரூஷியா அணுமின் நிலையத்தில் உள்ள 6 அணு உலைகள் வெடித்து சிதறின. எனவே அதில் அணு கதிரியக்கம் கசிய தொடங்கியது. பால், குடிநீர் மற்றும் உணவு பொருட்களில் அணு கதிர்வீச்சு பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமல் மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். இடிபாடுகளை அகற்றும் பணி இன்னும் முடிவடையவில்லை. பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

இந்த நிலையில் ஜப்பானில் மீண்டும் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 7.23 மணியளவில் கிழக்கு கடற்கரையில் உள்ள ஹான்ஷூ நகரில் பூமி குலுங்கியது. இதனால் கட்டிடங்கள் மற்றும் வீடுகள் அதிர்ந்து ஆட்டம் கண்டன. இதனால் பதறிய மக்கள் மீண்டும் பூகம்பம் ஏற்பட்டது என அச்சமடைந்தனர். வீடுகளை விட்டு வெளியேறி தெருவில் ஓட்டம் பிடித்தனர். 

நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து ஹான்ஷூ கடலில் வழக்கத்தை விட சுமார் 1.6 அடி உயரத்திற்கு அலைகள் எழும்பியது. இதைத் தொடர்ந்து அமெரிக்க பசுபிக் சுனாமி எச்சரிக்கை மையம் சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜப்பானுக்கு மட்டுமே சுனாமி எச்சரிக்கை விடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் மேற்கு கடற்கரை மற்றும் ஹலாய் தீவை சுனாமி அலைகள் தாக்கும் வாய்ப்பு இல்லை என்றும் அறிவித்துள்ளது. 

இதற்கிடையே 6.5 ரிக்டர் அளவில் நில நடுக்கம் பதிவாகி உள்ளதால் அமெரிக்காவில் புவியியல் சர்வே மையம் அறிவித்துள்ளது. புவிக்கு அடியில் 5.9 கிலோ மீட்டர் ஆழத்தில் இது ஏற்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. நேற்றைய நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் காயம் குறித்த தகவல்கள் ஏதும் உடனடியாக வெளியிடப்படவில்லை. தொடர்ந்து ஏற்படும் பூகம்பத்தால் ஜப்பான் மக்கள் பீதியில் உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்