முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செவிலியர்களுக்கு ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் விருது

ஞாயிற்றுக்கிழமை, 13 மே 2012      இந்தியா
Image Unavailable

புது டெல்லி,மே. - 14 - சர்வதேச செவிலியர் தினத்தையொட்டி சிறந்த செவிலியர்கள் 36 பேருக்கு ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் விருது வழங்கி கவுரவித்தார்.  கொல்கத்தா ஆம்ரி மருத்துவமனை தீ விபத்தின் போது நோயாளிகளை காக்கும் போராட்டத்தில் உயிரிழந்த வினிதா, ரம்யா ராஜப்பன் ஆகிய இரண்டு செவிலியர்களுக்கும் விருது வழங்கப்பட்டது. வினிதாவின் தந்தை மற்றும் ரம்யாவின் தாய் ஆகியோர் இந்த விருதை பெற்றுக் கொண்டனர். இறப்புக்குப் பின்பாக செவிலியர்களுக்கு ப்ளாரன்ஸ் நைட்டிங்கேல் விருது வழங்கப்படுவது இதுவே முதல் முறை. ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற இந்த விழாவில் இந்த விருதுகளை ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் வழங்கினார்.  விருது பெற்றவர்களில் உதவி செவிலியர்கள், பேறுகால மருத்துவ பெண்கள் மற்றும் கிராமப்புற சுகாதார பணியாளர்கள் இருவரும் அடங்குவர். மக்களுக்கு மருத்துவ உதவிகள் மற்றும் தகவல்கள் வழங்குவதில் செவிலியர்கள்தான் முதன்மையானவர்களாக உள்ளனர். நீங்கள் பார்ப்பது மனித தன்மைக்கு செய்யும் சேவையாகும் என்று அவர்களை ஜனாதிபதி வாழ்த்தினார்.  விருதுக்கான சான்றிதழ், பதக்கம், ரூ. 50 ஆயிரத்திற்கான ரொக்கம் ஆகியவை அவர்களுக்கு வழங்கப்பட்டன. செவிலியர் துறையை மேம்படுத்த செவிலியர் கல்விக்கு முக்கியத்துவம் அளிப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய சுகாதார துறை அமைச்சர் குலாம் நபி ஆஷாத் தெரிவித்தார். சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் காந்திசெல்வன் விருது பெற்ற செவிலியர்களின் ஈடிணையற்ற பங்களிப்பு புதிய தலைமுறைக்கு உந்து சக்தியாக அமையும் என்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்