முக்கிய செய்திகள்

விரைவில் வருகிறது புதிய 10 ரூபாய் நாணயம்

Ten Rupee

புதுடெல்லி,மார்ச்.29 - இந்திய ரிசர்வ் வங்கி துவக்கப்பட்டு 75 ஆண்டுகளாவதையொட்டி புதிய 10 ரூபாய் நாணயத்தை விரைவில் வெளியிடப்படுகிறது. ரூபாய் நோட்டுக்கள் அதிக அளவில் புழக்கத்தில் உள்ளன. இது கையில் வைத்திருக்கவும் எடுத்துச்செல்லவும் வசதியாக இருக்கிறது. ஆனால் பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் தீவிரவாத இயக்கங்கள் இந்திய ரூபாய் நோட்டுக்கள் மாதிரி கள்ள ரூபாய் நோட்டுக்களை அச்சடித்து ஜம்மு-காஷ்மீர் மற்றும் நேபாளம் வழியாக இந்தியாவில் புழக்கத்தில் விடுகிறார்கள். மேலும் உள்நாட்டிலும் ஒரு சில விஷமிகள் கள்ள ரூபாய் நோட்டுக்களை எளிதாக அச்சடித்து புழக்கத்தில் விடுகிறார்கள். இதை தடுக்கும் வகையில் இந்தியன் ரிசர்வ் வங்கியானது புதிய 10 ரூபாய் நாணயத்தை விரைவில் புழக்கத்தில் விட உள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியின் பவள விழாவையொட்டி இந்த புதிய 10 ரூபாய் நாணயம் வெளியிடப்படுகிறது. நாணயத்தின் முதல் பக்கத்தின் மத்தியில் அசோகர் தூணின் சிங்கத்தலை இடம் பெற்றிருக்கும். அதற்கு கீழே சத்தியம் ஏவே ஜெயதே என்ற வரி இடம் பெற்றிருக்கும். முதல் பக்க நாணய இடது மேல்புறம் பாரத் என்ற இந்தியிலும் வலது மேல்புறத்தில் இந்தியா என்று ஆங்கிலத்திலும் வார்த்தை பொறிக்கப்பட்டிருக்கும். சிங்க தலைக்கு கீழே ரூ 10 என்றும் இதற்கு இடது புறத்தில் இந்தியிலும் வலது புறத்தில் ஆங்கிலத்திலும் ரூ.10 என்ற வார்த்தைகள் இருக்கும். நாணயத்தின் மறுபக்கத்தில் பனைமரமும் புலியின் உருவமும் இருக்கும். இதன் இடது மற்றும் வலது பக்க ஓரத்தில் இந்தியன் ரிசர்வ் வங்கி(1935-2010) என்ற வரியும் அதன் சின்னமும் பொறிக்கப்பட்டிருக்கும் மேலும் பிளாட்டி னம் ஜூப்ளி என்ற வரியும் இடம் பெற்றிருக்கும்.

இதை ஷேர் செய்திடுங்கள்: