முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை சூப்பர் கிங்ஸ் டெல்லி டெவில்சை வீழ்த்தியது

திங்கட்கிழமை, 14 மே 2012      விளையாட்டு
Image Unavailable

சென்னை, மே. - 14 - 5-வது ஐ.பி.எல். டி - 20 கிரிக்கெட் போ ட்டியில் சென்னையில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி டேர்டெவில்சை வீழ்த்தி இந்த த் தொடரில் முன்னிலை பெற்று உள்ளது. இந்தப் போட்டியில் சென்னை அணி தரப்பில், எம். விஜய், மைக் ஹஸ்சே மற்றும் சுரேஷ் ரெய்னா ஆகியோர் அபாரமாக பேட்டிங் செய்து அணிக்கு வெற்றி தேடித் தந்தனர். முன்னதாக பெளலிங்கின் போது, சென்னை அணி வீரர்கள் சிறப்பாக பந்து வீசி டெல்லி அணியின் ரன் ரேட்டைக் கட்டுப்படுத்தினர். இதுவே அந்த அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. ஹில்பென்ஹாஸ் 3 முக்கிய விக்கெட்டைக் கைப்பற்றி டெல்லியின் சரிவை துவக்கி வைத்தார். ஐ.பி.எல். போட்டியின் 49-வது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் அரங்கத்தில் நடைபெற்றது. இதில் கேப்டன் சேவாக் தலைமையிலான டெல்லி டேர்டெ வில்ஸ் அணியும், கேப்டன் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. முதலில் பேட்டிங் செய்ய களம் இறங் கிய டெல்லி அணி சென்னையின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. இறுதியில் அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 114 ரன்னை எடுத்தது. டெல்லி அணி தரப்பில், ஒய் . நாகர் அதிகபட்சமாக 47 பந்தில் 43 ரன்னை எடுத்தார். இதில் 1 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் அடக்கம். வேணுகோபால்ராவ் 24 பந்தில் 27 ரன் எடுத்தார். இதில் 2 பவுண்டரி அடக்கம். தவிர, இர்பான் பதான் 13 ரன் எடுத்தார். முன்னதாக வார்னர் 8 ரன்னிலும், சேவாக் 3 ரன்னிலும், என். ஓஜா 3 ரன்னிலும், ஜெயவர்த்தனே 8 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். சென்னை அணி தரப்பில் முன்னணி வேகப் பந்து வீச்சாளரான ஹில்பென் ஹாஸ் 27 ரன்னைக் கொடுத்து 3 விக்கெட் எடுத்தார். தவிர, மார்கெல் மற்றும் அஸ்வின் ஆகியோர் தலா 1 விக்கெட்எடுத்தனர். சென்னை அணி 115 ரன்னை எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற எளிய இலக்கை டெல்லி அணி வைத்தது. அடுத்து களம் இறங்கிய அந்த அணி 15.2 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 115 ரன்னை எடுத்தது. இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த லீக் ஆட்டத்தில் 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் அந்த அணிக்கு 2 புள்ளிகள் கிடைத்தது.சென்னை அணி தரப்பில், எம். விஜய் 40 பந்தில் 48 ரன்னை எடுத்து இறுதிவரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். இதில் 5 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் அடக்கம். ரெய்னா 20 பந்தில் 28 ரன்னை எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். இதில் 1 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் அடக்கம். முன்னதாக மைக் ஹஸ்சே 32 பந்தில் 38 ரன்னை எடுத்தார். இதில் 5 பவுண்டரி அடக்கம். டெல்லி அணி சார்பில், இர்பான் பதான் 15 ரன்னைக் கொடுத்து 1 விக்கெட் எடுத்தார். மார்கெல், உமேஷ் யாதவ் மற்றும் வான்டெர் மெர்வே ஆகியோருக்கு விக்கெட் கிடைக்கவில்லை. இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாக ஹில்பென்ஹாஸ் தேர்வு செய்யப்பட்டார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்