முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தோல்வி பயத்தில் கருணாநிதி புலம்பல்

செவ்வாய்க்கிழமை, 29 மார்ச் 2011      சினிமா
Image Unavailable

 

சென்னை,மார்ச்.29 - சினிமா பணிதான் நிரந்தரமானது. கலைத்துறைதான் என்றைக்கும் எனக்கு நிரந்தரம் என்று கருணாநிதி தோல்வி பயத்தில் பேசியுள்ளார். நடிகர் தியாகராஜன் இயக்கத்தில் கருணாநிதி எழுதிய பொன்னர் சங்கர் நாவல் அதே பெயரில் படமாகி உள்ளது. பிரசாந்த் இரு வேடங்களில் நடித்துள்ள இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இந்த விழாவில் பாடல்கள் அடங்கிய சி.டியை முதல்வர் வெளியிட பொள்ளாச்சி மகாலிங்கம் பெற்றுக் கொண்டார். பின்னர் இந்த விழாவில் பேசிய முதல்வர் கருணாநிதி, 

இடைவிடாத தேர்தல் பணிகளுக்கு இடையே இந்த விழாவில் கலந்து கொண்டிருக்கிறேன். சினிமா பணிதான் நிரந்தரமானது. முதல்வர் பதவி வரும் போகும். அது இடையில் கிடைக்காமலும் போகலாம். பொதுவாக இப்போது திரைப்பட விழாக்களில் கலந்து கொள்வதில் எனக்கு அச்சமாக உள்ளது. திரைப்பட விழாக்களில் கலந்து கொள்வதால் விமர்சனத்துக்கு உள்ளாவதால் அத்தைகய நிகழ்ச்சிகளை தவிர்ப்பதில் மிகுந்த அக்கறையோடு இருந்து வருகிறேன். 

இந்த சினிமாவில் மட்டும் எனக்கு தனிப்பட்ட அக்கறை ஆர்வம். பெங்களூரில் என் மகள் வீட்டில் தங்கியிருந்து இந்தப் படத்தின் திரைக்கதை உருவாக்கத்தை முடித்துக் கொடுத்தேன். இப்போது இந்த படத்தை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. நான் அரசியல்வாதியாக இருந்தாலும் என் ஆர்வமெல்லாம் எழுத வேண்டும் என்பதுதான். எழுத்தை மறந்து என்னால் இருக்க முடியாது. கருணாநிதி குடும்பம்தான் சினிமாத் துறையை பங்கு போட்டு கொண்டுள்ளது என சமீபத்தில் ஒரு பத்திரிக்கையில் எழுதியிருக்கிறார்கள். 

என் மகன் முத்து உள்ளிட்ட எனது குடும்பத்தினர் சிலர் நடித்தனர். இப்போதும் நடித்து வருகிறார்கள். அந்த பத்திரிக்கைகளை பார்த்து கேட்கிறேன். என் குடும்பம் மட்டும்தான் சினிமாவில் இருக்கிறதா? ஏ.வி.எம். குடும்பத்தினர் உள்ளிட்ட பலர் சினிமாவில்தான் இருக்கிறார்கள். எந்த காரணத்துக்காக என் குடும்பம் சினிமாவில் இருக்க கூடாது என தெரியவில்லை என்று பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்