முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தடையில்லா மின்சாரம் - வேட்பாளர் செல்லூர் ராஜூ பிரசாரம்

செவ்வாய்க்கிழமை, 29 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

 

மதுரை, மார்ச் 29 - ஜெயலலிதாவை நீங்கள் முதல்வராக்கினால் 24 மணிநேரமும் தடையில்லாத மின்சாரம் கிடைக்கும் என்று மேற்கு தொகுதி வேட்பாளர் செல்லூர் ராஜூ தேர்தல் பிரச்சாரத்தில் தெரிவித்தார். மதுரை மேற்கு தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் செல்லூர் ராஜூ அ.தி.மு.க.மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சென்று தீவிர பிரசாரம் செய்து ஓட்டு சேகரித்து வருகிறார்.  

மதுரை மேற்கு தொகுதிக்குட்பட்ட டி.வி.எஸ்.நகர், முத்துப்பட்டி ஆகிய இடங்களில் நேற்று மாலை  வீதி,வீதியாக சென்று பொதுமக்களை சந்தித்து இரட்டை இலைக்கு  ஆதரவு திரட்டினார். அப்போது  வேட்பாளர் செல்லூர் ராஜூவுக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு கொடுத்தனர். இதனைத் தொடர்ந்து அந்த பகுதியில்  திறந்த ஜீப்பில் சென்று பிரசாரம் செய்த செல்லூர் ராஜூ பொதுமக்களிடையே  பேசியதாவது:-

வரும் 13 -ம் தேதி நடக்க உள்ள சட்டசபை தேர்தலில் மதுரை மேற்கு தொகுயில் போட்டியிடும் எனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து  வெற்றிபெற செய்தால் தமிழகத்தில் மீண்டும் ஜெயலலிதா முதலமைச்சராக வருவார். அப்போது பொதுமக்களுக்கு 24 மணி நேரமும் தங்கு  தடையில்லாத மின்சாரம் கிடைக்கும்.

டி.வி.எஸ்.நகரில் முடிவடையாத நிலையில் உள்ள பாதாள சாக்கடை பணிகளை உடனடியாக முடிக்க ஏற்பாடு செய்யப்படும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தவும், சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும் அ.தி.மு.க.வுக்கு மக்கள் வாக்களிக்கவேண்டும் என்று அனைவரையும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன். 

இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் நேற்று துவரிமான் பகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் செல்லூர் கே.ராஜூ வீடு வீடாகச் சென்று பொதுமக்களை நேரில் சந்தித்து இரட்டை இலைக்கு ஓட்டுக் கேட்டார். முன்னதாக அங்குள்ள கருப்பணசாமி கோவிலில் சாமி கும்பிட்டார். 

அ.தி.மு.க.வேட்பாளர் செல்லூர் ராஜூவுடன் முன்னாள் எம்.பி. வி.வி.ராஜன்செல்லப்பா, மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் பெ.சாலைமுத்து, முன்னாள் அமைச்சர் வளர்மதி ஜெபராஜ், பொருளாளர் வில்லாபுரம் ஜெ.ராஜா, மாநில பொதுக்குழு உறுப்பினர் வி.எஸ்.முத்துராமலிங்கம், விளாங்குடி முன்னாள் சேர்மன் கு.திரவியம்,  பேரவை துணைச் செயலாளர் வெற்றிவேல்,  இளைஞரணி பொருளாளர் முத்துமுருகன், மேற்கு பகுதி இளைஞரணி செயலாளர் ஆட்டோ விஜயன், உசிலை தவசி,  பாகச்செயலாளர்கள் மரக்கடை கண்ணன், யுகாராஜா,  செல்லூர் பாஸ்கரன், து.கி.தமிழ்செல்வன், விசுவலிங்கம், கவுன்சிலர் ராஜா என்ற சீனிவாசன் ஐ.பி.எஸ்.பாலமுருகன், கோட்டைச்சாமி, பாக்கியராஜ், மகளிரணி தெய்வம் கணபதி, எல்டா பாஸ்டின், குமுதா, செல்வி உள்பட ஏராளமானோர் உடன் சென்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்