முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெட்ரோல் விலை உயர்வு: அலைமோதிய மக்கள்

வியாழக்கிழமை, 24 மே 2012      வர்த்தகம்
Image Unavailable

 

 

மதுரை, மே. 24 - மத்திய அரசு நேற்று திடீரென பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ. 7.50 உயர்த்தியதன் பலனாக தமிழகம் முழுவதும் உள்ள பெட்ரோல் பங்க்குகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. மேலும் பெரும்பாலான பங்க்குகளில் ஸ்டாக் இல்லை என்ற வாசகமும் காணப்பட்டது. 

கடந்த 2010-ம் ஆண்டில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்த பெட்ரோல் விலை நிர்ணயத்தை பெட்ரோல் விநியோக நிறுவனங்களே முடிவு செய்து கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்ததிலிருந்து பலமுறை பெட்ரோல் விலை உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நேற்று நள்ளிரவு முதல் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ. 7.50 மத்திய அரசு உயர்த்தியுள்ளது. 

பெட்ரோல் விலை உயர்வு உடனடியாக அமலுக்கு வந்ததை அடுத்து இந்தியா முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.  தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் மத்திய அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான பெட்ரோல் பங்க்குகளில் கூட்டம் நிரம்பி வழியத் தொடங்கியது. மேலும் சில பெட்ரோல் பங்க்குகளில் ஸ்டாக் இல்லை என்ற வாசகம் அடங்கிய அட்டைகளும் தொங்க விடப்பட்டிருந்தன. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அதிருப்திக்குள்ளாகினர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!