முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதுக்கோட்டை மனுத்தாக்கல் இன்று கடைசி நாள்

வெள்ளிக்கிழமை, 25 மே 2012      தமிழகம்
Image Unavailable

புதுக்கோட்டை, மே. 25 - புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலுக்கான வேட்பு மனு இன்றுடன் முடிவடைகிறது. அ.தி.மு.க,தே.மு.தி.க. வேட்பாளர்கள் உட்பட 17 பேர் மனுத் தாக்கல் செய்துள்ளனர். வரும் 12 ம் தேதி இடைத் தேர்தல் நடக்கவுள்ளது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த 18 ம் தேதி துவங்கியது. முதல் நாளே தே.மு.தி.க வேட்பாளர் ஜாஹீர் உசேன் மனுத்தாக்கல் செய்தார். நேற்று முன்தினம் அ.தி.மு.க. வேட்பாளர் கார்த்திக் தொண்டமான் வேட்புமனுத்தாக்கல் செய்தார். ஐ.ஜே.கே. வேட்பாளர் சீனிவாசனும் மனுத்தாக்கல் செய்தார். மது குடிப்போர் விழிப்புணர்வு புரட்சி இயக்கம் சார்பில் செல்லபாண்டியன், பாரதீய ஜனதா சேவா கட்சி சார்பில் ஆறுமுகம், இந்திய மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியை சேர்ந்த விஜயன் ஆகியோரும் மனுத்தாக்கல் செய்துள்ளனர். சுயேட்சைகளாக 8 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இதுவரை 17 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர். மனுத்தாக்கல் மீதான பரிசீலனை நாளை நடைபெறுகிறது. மனுக்கள் வாபஸ் பெற கடைசி நாள் 28 ம் தேதியாகும். அன்று மாலையே இறுதி பட்டியல் வெளியிடப்படுகிறது. வாக்கு எண்ணிக்கை ஜூன் மாதம் 15 ம் தேதி நடக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!