முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெட்ரோல் விலை உயர்வு மக்களுக்கு மத்தியரசு தந்த பரிசு

வெள்ளிக்கிழமை, 25 மே 2012      தமிழகம்
Image Unavailable

சென்னை, மே.25 - பெட்ரோல் விலையை ஒரே நாளில் ரூ.7.50 உயர்த்திய மத்திய அரசை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.``சாமான்ய மக்களுக்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் மூன்றாண்டு பரிசு'' என்று  தா.பாண்டியன் குற்றம்சாற்றியுள்ளார். கடந்த ஓராண்டில் 3 முறை பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டது. அதனை தொடர்ந்து நேற்று நள்ளிரவு முதல் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.7.50 மத்திய அரசு உயர்த்தியது.
விலை உயர்வு மக்களுக்கு தந்த பரிசு: ``பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டிருப்பது சாமான்ய மக்களுக்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் மூன்றாண்டு பரிசு'' என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
பெட்ரோல் விலை உயர்விற்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை சைதை பனகல் மாளிகை முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தா.பாண்டியன், சாமான்ய மக்களை பெரிதும் பாதிக்கும் பெட்ரோல் விலை உயர்வை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தினார்.``சாமான்ய மக்களுக்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் மூன்றாண்டு பரிசு'' என்று அவர் குற்றம்சாற்றியுள்ளார்.
முற்றுகை போராட்டம்: விலை உயர்விற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்தியன் ஆயில் பவன் முன்பு அதன் தலைவர் லெனின் தலைமையில் 50 -க்கும் மேற்பட்டோர் நேற்று காலை முற்றுகை போராட்டம் நடத்தினர்.
போராட்டத்தில் ஈடுபட்ட லெனின் கூறுகையில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் மூன்றாண்டு கால நிறைவின் பரிசாக இந்த விலை உயர்வை மக்களுக்கு அளித்துள்ளனர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. விலை உயர்வை மத்திய அரசு திரும்ப பெறாவிடில் நாடு தழுவிய அளவில் மாணவர் அமைப்பு சார்பில் தொடர் போராட்டங்கள் நடைபெறும் என எச்சரித்தார். இதனை தொடர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட 30 பேரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றிச் சென்றனர். முற்றுகை போராட்டம் காரணமாக நுங்கம்பாக்கம் சாலையில்  நேற்று காலை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!