முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பை கோருகிறார் அகிலேஷ் யாதவ்

ஞாயிற்றுக்கிழமை, 27 மே 2012      இந்தியா
Image Unavailable

லக்னோ, மே - 28 - உத்தரபிரதேச சட்டமன்றக் கூட்டத்தொடர் இன்று பரபரப்பான சூழ்நிலையில் ஆரம்பமாகிறது.  முன்னதாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டிய மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ், எதிர்க்கட்சிகள் கூட்டத்தொடரை சமூகமாக நடத்த ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இந்த கூட்டத்தொடர் அதிக நாட்கள் நடக்க வேண்டும். அதற்கு எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும் என்று அகிலேஷ் யாதவ் வேண்டுகோள் விடுத்தார். லக்னோவில் உள்ள அவரது அலுவலக இல்லத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாயாவதி கட்சி தவிர உ.பி.யின் அனைத்து பிரதான கட்சிகளும் கலந்துகொண்டன. அப்போது பேசிய அகிலேஷ் யாதவ், 90 நாட்களுக்கும் மேலாக சட்டமன்ற அமர்வுகள் நடக்க வேண்டும் என்று நான் விரும்புகின்றேன். அதற்கு எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். பொதுநலன் கருதி கட்சிகள் ஒத்துழைப்பு தரவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். எதிர்க்கட்சியினரின் பிரச்சனைகள் காதுகொடுத்து கேட்கப்படும் பின்னர் அவற்றில் கவனம் செலுத்தப்படும் என்றும் அகிலேஷ் உறுதி அளித்தார். அப்போது எதிர்க்கட்சியினரும் பாமர மக்களின் பிரச்சனைகளில் இந்த அரசுக்கு ஆக்கப்பூர்வமான சாதகமான ஆதரவைத் தருவோம் என்று உறுதி அளித்ததாக சமாஜ்வாடி கட்சியின் பிரதிநிதியும் எம்.எல்.சி.யுமான ராஜேந்திர சவுத்திரி தெரிவித்தார். முன்னதாக நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் சட்டசபையின் அவை முன்னவர் அஹமது ஹசன் மற்றும் அமைச்சர் அம்பிகா சவுத்திரி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இன்று கூடும் உ.பி. சட்டமன்ற கூட்டத் தொடர் மிகவும் பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்