முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விவேக்கை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி

புதன்கிழமை, 30 மே 2012      தமிழகம்
Image Unavailable

 

பெரியகுளம், மே. 30 - சென்னையில் கைது செய்யப்பட்ட தீவிரவாதி விவேக்கை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை செய்ய பெரியகுளம் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.  தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள முருகமலை வனப்பகுதியில் கடந்த 2007 ம் ஆண்டு ஜூன் மாதம் ஆயுத பயிற்சி மேற்கொள்ள முயன்ற தீவிரவாதிகள் வேல்முருகன், பழனிவேல், முத்துசெல்வம், கார்த்திக், ஈஸ்வரன், பாலன் மற்றும் இக்கும்பலின் தலைவன் சுந்தரமூர்த்தி ஆகிய 7 பேரை கைது செய்து வழக்கு தொடர்ந்தனர். 

இவ்வழக்கில் தொடர்புடைய விவேக்கை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் கடந்த 19 ம் தேதி சென்னை அண்ணாநகரில் விவேக்கை போலீசார் கைது செய்து 20 ம் தேதி தேனி மாவட்ட குற்றவியல் நடுவர் மன்றத்தில் கியூ பிரிவு போலீசார் ஆஜர்படுத்தினர். அதனை தொடர்ந்து விவேக் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் விவேக்கை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதி கோரி கியூ பிராஞ்ச் போலீசார் பெரியகுளம் ஜூடியசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.இதனை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பெரியகுளம் கோர்ட்டுக்கு கொண்டு வரப்பட்டான். 

தீவிரவாதி விவேக் மாவோயிஸ்டு என்பதால் அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்துவதற்கு அனுமதி வழங்குமாறு அரசு வழக்கறிஞர் கவிதா வாதாடினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவேக் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் மறுப்பு தெரிவித்தனர். இதையடுத்து 3 நாட்கள் அவரை போலீஸ் காவலில் விசாரணை நடத்துவதற்கு நீதிபதி வீரணன் அனுமதி வழங்கி உத்தரவிட்டார். நாளை 31 ம் தேதி மாலை அவரை பெரியகுளம் கோர்ட்டில் ஆஜர்படுத்துமாறும் போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்