முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாக்., மீண்டும் மீண்டும் அணுஆயுத ஏவுகணை சோதனை

வெள்ளிக்கிழமை, 1 ஜூன் 2012      வர்த்தகம்
Image Unavailable

 

இஸ்லாமாபாத், ஜுன்1 - கடந்த ஒரு வாரத்தில் இரண்டாவது முறையாக பாகிஸ்தான் அணு ஆயுத ஏவுகணை சோதனை ஒன்றை நடத்தியுள்ளது. இந்தியா பல்வேறு பெயர்களில் பல்வேறு ஏவுகணைகளை தயாரித்து அவற்றை சோதனை செய்து ராணுவத்தில் இணைத்து வருகிறது. இந்தியாவுக்கு போட்டியாக பாகிஸ்தானும் பல்வேறு ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. சமீபத்தில் அக்னி - 5 என்ற கண்டம் விட்டு கண்டம் பாயும் அணு ஆயுத ஏவுகணை ஒன்றை இந்தியா வெற்றிகரமாக சோதித்துப் பார்த்தது. இதையடுத்து பாகிஸ்தானும் கடந்த மாதம் கடாப் 8 என்ற அணு ஆயுத ஏவுகணை ஒன்றை வெற்றிகரமாக சோதித்துள்ளதாக அந்நாட்டு ராணுவம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் இதே ரக அணு ஆயுத ஏவுகணை ஒன்றை மீண்டும் வெற்றிகரமாக சோதித்துள்ளதாக பாகிஸ்தான் ராணுவம் கூறியுள்ளது. இந்த ஏவுகணை விண்ணில் இருந்து ஏவப்பட்டு தரை இலக்கைத் தாக்கக்கூடியது. இது 350 கி.மீ. தூரம் பாய்ந்து சென்று தாக்கும் திறன் கொண்டது. எதிரிக்குத் தெரியாமல் பதுங்கிச் செல்லும் ஆற்றல் கொண்டது. இந்தியாவில் உள்ள முக்கிய நிலைகளை தாக்கும் திறன் கொண்டது என்று பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் கூறினர். கடந்த மே 29 ம் தேதிதான் 60 கி.மீ.தூரத்தை பாய்ந்து சென்று தாக்கும் அணு ஆயுத ஏவுகணை சோதனையை பாகிஸ்தான் நடத்தியது. இப்போது 350 கி.மீ.தூரம் பாய்ந்து சென்று தாக்கும் இதே ரக ஏவுகணையை பாக். மீண்டும் சோதித்துள்ளதாக அந்நாட்டு ராணுவம் கூறியுள்ளது. ஆனால் இந்த ஏவுகணை எங்கிருந்து ஏவப்பட்டது என்ற விபரங்களை பாகிஸ்தான் ராணுவம் தெரிவிக்கவில்லை. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்