முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடலோரப் பகுதிகளில் அணுக்கதிர் வீச்சு அளவை உணர்த்த எச்சரிக்கை

திங்கட்கிழமை, 4 ஜூன் 2012      உலகம்
Image Unavailable

 

இலங்கை, ஜூன் - 4 - கூடங்குளம் அணுமின் நிலையத்திலிருந்து அணுக்கதிர்வீச்சு பரவினால் அதை எச்சரிக்கும் வகையில் கருவிகளை அமைக்க இலங்கை அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளது. இது குறித்து அந்நாட்டின் அணுசக்தி ஆணையத் தலைவர் ஆர்.எல். விஜேவர்தன கூறுகையில், கூடங்குளம் அணுமின் உலையின் செயல்பாடு விரைவில் தொடங்க உள்ள நிலையில் கடலோரப் பகுதிகளில் அணுக்கதிர் வீச்சு அளவை உணர்த்தும் எச்சரிக்கைக் கருவிகளை நிறுவ இலங்கை அரசு நடவடிக்கை மேற்கொண்டுவருகிறது. இதன்படி 8 கருவிகள் கடலோரத்தில் அமைக்கப்படும். இலங்கையில் இருந்து 200 கி.மீ. தூரத்தில் கூடங்குளம் இருப்பதால் இத்தகைய எச்சரிக்கைக் கருவிகளை நிறுவ உள்ளோம். இந்தக் கருவிகள் கொழும்பு மற்றும் மேற்கு மாகாணமான கலப்பிட்டியா மற்றும் தலைமன்னார், திரிகோணமலை, கண்டி ஆகிய பகுதிகளில் நிறுவப்படும். இவை அனைத்தும் அணுசக்தி ஆணைய மைய அலுவலகங்களிலிருந்து இயக்கப்படும். அடுத்த இரண்டு மாதங்களில் இந்த எச்சரிக்கைக் கருவிகள் செயல்பாட்டுக்கு வரும். அணுக் கதிர் வீச்சு அபாயம் ஏற்படும் போது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்து தேவையான நடவடிக்கைகள் எடுக்க இக்கருவிகள் உதவியாக இருக்கும். இந்தியாவில் அணுமின் நிலையம் அமைப்பதற்கு இலங்கை எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. அதேசமயம் ஆதரவும் தெரிவிக்கவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்