முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊழல் நிறைந்த ஐ.மு.கூட்டணி அரசு பொதுத்தேர்தலில் தோல்வி அடையும்

செவ்வாய்க்கிழமை, 5 ஜூன் 2012      ஊழல்
Image Unavailable

ஐதராபாத்,ஜூன்.- 5 - பொருளாதார வளர்ச்சியில் மந்தமும் ஊழலும் மலிந்துவிட்டதால் மத்தியில் ஆளும காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி தோல்வி அடையும் என்று பாரதிய ஜனதா கணித்துள்ளது. மத்தியில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி உள்ளது. இந்த ஆட்சியில் பொருளாதார வளர்ச்சியில் மந்தம் ஏற்பட்டுள்ளது. அதோடுமட்டுமல்லாது ஊழல் மலிந்துவிட்டது. இதன் விளைவு அடுத்த பொதுத்தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடையும் என்று பாரதிய ஜனதா செய்தி தொடர்பாளரும் எம்.பி.யுமான பிரகாஷ் ஜவதேகர் நேற்று ஐதராபாத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறினார். கடந்த 1975-ம் ஆண்டு நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது. அப்போது பணவீக்கமும் ஊழலும் அதிகமாக இருந்தது. மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. கடந்த 1987-89-ம் ஆண்டுகளில் இதே சூழ்நிலை நிலவியது. அப்போதும் நடந்த தேர்தலில் மத்தியில் இருந்த ஆளும் கட்சி தோல்வி அடைந்தது. தற்போதும் ஊழல் மலிந்துவிட்டதோடு பணவீக்கமும் அதிகரித்துவிட்டது. அதனால் வருகின்ற 2014-ம் ஆண்டு நடைபெற உள்ள பொதுத்தேர்தலில் மத்தியில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசு படுதோல்வி அடையும் என்று பிரகாஷ் ஜவதேகர் கூறினார். பிரதமர் மன்மோகன் சிங் ஒரு பொருளாதார நிபுணராக இருந்தும் கூட நாட்டின் பொருளாரத்தை முன்னேற்றம் அடைய செய்ய தவறிவிட்டார். உறுதியான முடிவு எடுக்க முடியாததுதான் இதற்கு முக்கியமான காரணமாகும். இந்தியாவின் வளர்ச்சி தொழில்முனைவோர்களின் கையில்தான் உள்ளது. அவர்கள் சுதந்திரமான முறையில் செயல்பட அனுமதிக்க வேண்டும். அப்போதுதான் நாட்டின் பொருளாதார வளர்ச்சி அதிகமாக இருக்கும். 9 சதவீதமாக இருந்த பொருளாதார வளர்ச்சி 5.3 சதவீதமாக குறைந்துவிட்டது என்று ஜவதேகர் மேலும் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்