முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜூலை 13-ல் பொறியியல் படிப்புகளில் சேர கலந்தாய்வு

வெள்ளிக்கிழமை, 8 ஜூன் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூன்.8- தமிழகத்தில் உள்ள பொறியியல் படிப்புகளில் சேர விண்ணப்பித்த மாணவர்களுக்கான கலந்தாய்வு ஜுலை 13-ம் தேதி துவங்கி ஆகஸ்ட் மாதம் 14-ம் தேதி வரை நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் மன்னர் ஜவகர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் பிளஸ்2 தேர்வு முடிவுகள் கடந்த 22-ம் தேதி வெளியானது. இதனிடையே 11-ம் தேதி முதல் பொறியியல் படிப்பில் சேருவதற்கான விண்ணப்பங்கள் அண்ணா பல்கலையில் விநியோகிக்கப்பட்டு வந்தன.

பொறியியல் படிப்பில் சேருவதற்கான விண்ணப்பங்கள் விற்பனை நேற்று  முன்தினத்தோடு  முடிவடைந்தன.  இதுவரை வரை 2 லட்சத்து 28 ஆயிரத்து 243 விண்ணப்பங்கள் விற்பனையானதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்தது. பொறியியல் படிப்பில் சேருவதற்கான கவுன்சிலிங் அட்டவணை விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி கவுன்சிலிங் அட்டவணை நேற்று வெளியிடப்பட்டுள்ளது.

பொறியியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கை, கவுன்சிலிங் மற்றும் ரேண்டம் எண் வழங்குதல் ஆகியவை குறித்த ஒருங்கிணைப்பு கூட்டம் அண்ணா பல்கலையில் நேற்று  காலை நடைபெற்றது.பல்கலைக்கழக துணைவேந்தர் மன்னர் ஜவஹர் இதில் பங்கேற்றனர். இதன் பிறகு  கவுன்சிலிங் அட்டவணையை மன்னர் ஜவஹர் வெளியிட்டார். அதன்படி பொது கவுன்சிலிங் 13-ம் தேதி துவங்குகிறது. ரேண்டம் எண் 26-ம் தேதி வெளியிடப்பட்டு ரேங்க் பட்டியயல் 30-ம் தேதி வெளியிடப்படுகிறது.

விளையாட்டுத்துறைக்கான கவுன்சிலிங் ஜூலை 5-ல் நடக்கிறது. ஜூலை 7ம் தேதி முதல் 11-ம் தேதி வரை தொழிற்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வும் நடைபெறும். மாற்றுத்திறனாளிகளுக்கான கவுன்சிலிங் 12ம் தேதி நடக்கிறது. அதனைத் தொடர்ந்து 13-ம் தேதி பொது கவுன்சிலிங் துவங்குகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்