முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேசிய வங்கிகளிலும் வருமானவரி செலுத்தலாம்: ரிசர்வ்வங்கி அறிவிப்பு

சனிக்கிழமை, 9 ஜூன் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூன்.- 9 - வருமான வரி செலுத்துவோர் ரிசர்வ் வங்கி தவிர, குறிப்பிட்ட தேசியமயமாக்கப்பட்ட மற்றும் தனியார்துறை வங்கிகளிலும் செலுத்தலாம் என்று இந்தியன் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கை ஜூன் மாத இறுதியில் மிக அதிக அளவிலிப்பது தெரிய வந்துள்ளது. இதனை தவிர்க்க கூடுதல் முகப்புகள் அமைக்கப்பட்ட போதிலும் செலுத்தப்படும் வரி பணத்தை பெறுவதில் வங்கிக்கு சிரமமாகவே உள்ளது. இதனால் பொதுமக்கள் தேவையின்றி நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிவுள்ளது. இதனை தவிர்த்திட குறித்த நாளுக்கு முன்னதாகவே வரியை செலுத்துமாறு வேண்டுகிறோம். மேலும் வரி செலுத்துவோரின் வசதிக்காக இந்திய ரிசர்வ் வங்கி தவிர, தமிழகத்திலுள்ள தேசிய மையமாக்கப்பட்ட பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகளின் சில குறிப்பிட்ட கிளைகளுக்கு வரியை பணமாகவோ காசோலையாகவோ பெற அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த வசதியினை வரி செலுத்துவோர் பயன்படுத்திக் கொள்ளலாம். குறிப்பிடப்பட்டுள்ள வங்கிகளின் விவரம் பின்வருமாறு:- பாரத் ஸ்டேட் வங்கி, ஸ்டேட் பாங்க் ஆஃப் திருவான்கூர், ஸ்டேட் பாங்க் ஆஃப் ஹைதராபாத், ஸ்டேட் பாங்க் ஆஃப் மைசூர், ஸ்டேட் பாங்க் ஆஃப் படியாலா, அலகாபாத் வங்கி, ஆந்திரா வங்கி,  பாங்க் ஆஃப் பரோடா, பாங்க் ஆஃப் இந்தியா, பாங்க் ஆஃப் மஹாராஷ்ட்ரா, கனரா வங்கி, சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா, கார்ப்பேரேஷன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, சின்டிகேட் வங்கி, யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா, யுனைடெட் பாங்க் ஆஃப் இந்தியா, யூகோ வங்கி, விஜயா வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஐடீபீஐ வங்கி, எச்டீஎஃப்சீ வங்கி, தேனா வங்கி, இந்தியன் வங்கி.

இவ்வாறு இந்தியன் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள  செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்