முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கன்னோஜ் இடைத் தேர்தல்: அகிலேஷின் மனைவி தேர்வு

திங்கட்கிழமை, 11 ஜூன் 2012      இந்தியா
Image Unavailable

கன்னோஜ், ஜூன். - 11 - உத்தரபிரதேச மாநிலம் கன்னோஜ் மக்களவை தொகுதி இடைதேர்தலில் முதல்வர் அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் யாதவ் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். மாவட்ட தேர்தல் அதிகாரி செல்வகுமாரி இதற்கான அறிவிப்பை வெளியிட்டார்.  இடைத் தேர்தலில் போட்டியிட மனுத் தாக்கல் செய்திருந்த இருவர் தங்கள் மனுக்களை வாபஸ் பெற்றனர். இதையடுத்து டிம்பிள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். கன்னோஜ் மக்களவை தொகுதியில் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படும் 2 வது பெண் டிம்பிள் என்பது குறிப்பிடத்தக்கது.  இதற்கு முன்பாக தற்போதைய டெல்லி முதல்வரான ஷீலாதீட்சித் 1984 ம் ஆண்டு மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். வேட்பு மனுக்களை வாபஸ் பெற கடைசி நாளன்று சம்யுக்த சமாஜ்வாடி தளம் கட்சியை சேர்ந்த தசரதசிங் சங்வாரும், சுயேச்சையாக வேட்பு மனுத்தாக்கல் செய்திருந்த சஞ்சு சட்டியாரும் தங்கள் மனுக்களை வாபஸ் பெற்றனர். முதல்வராக பதவியேற்றதால் கன்னோஜ் மக்களவை தொகுதி உறுப்பினர் பதவியை அகிலேஷ் யாதவ் ராஜினாமா செய்தார். இதையடுத்து அத்தொகுதியில் இடைதேர்தல் அறிவிக்கப்பட்டது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்