முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆந்திர தேர்தலில் சிரஞ்சீவியின் ஓட்டுக்கள் சரிந்தன

சனிக்கிழமை, 16 ஜூன் 2012      சினிமா
Image Unavailable

 

நகரி,ஜூன். 17 - நடிகர் சிரஞ்சீவி 3 ஆண்டுகளுக்கு முன்பு பிரஜாராஜ்யம் என்ற கட்சியை தொடங்கினார். கடந்த 2006 ம் ஆண்டு ஆந்திராவில் நடந்த சட்டசபை தேர்தலில் அவரது கட்சி திருப்பதி உட்பட 18 தொகுதிகளில் வெற்றி பெற்றது. மொத்த ஓட்டு சதவீதத்தில் 18 சதவீத ஓட்டுக்கள் அவரது கட்சிக்கு கிடைத்தது. இந்நிலையில் காங்கிரஸ் மேலிடம் மீது ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஜெகன்மோகன் ரெட்டி அக்கட்சியில் இருந்து விலகினார். பின்னர் ஒய்.எஸ்.ஆர். என்ற கட்சியை தொடங்கினார். ஜெகன்மோகனால் ஏற்படும் இழப்பை சரிக்கட்ட காங்கிரஸ் மேலிடம் சிரஞ்சீவி கட்சியை தங்கள் கட்சியில் இணைத்துக் கொண்டது. இதன் மூலம் தங்களுக்கு சிரஞ்சீவி கட்சியின் 18 சதவீத ஓட்டுகள் கிடைக்கும் என்று காங்கிரஸ் கனவு கண்டது. 

ஆனால் சிரஞ்சீவி காங்கிரசில் சேர்ந்ததால் அக்கட்சிக்கு எந்த பலனும் இல்லை. உதாரணமாக, 2009 ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் திருப்பதி தொகுதியில் சிரஞ்சீவி போட்டியிட்டு வெற்றி பெற்றார். இரு கட்சிகளும் இணைந்து விட்டதால் தற்போதைய இடைத் தேர்தலில் காங்கிரசுக்கு 96 ஆயிரத்து 484 ஓட்டுகள் மட்டுமே கிடைத்துள்ளது. இதேபோல் தெலுங்கானா பகுதியில் உள்ள பரக்காலா தொகுதியில் கடந்த 2009 ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் 69 ஆயிரத்து 135 ஓட்டுகள் பெற்றிருந்தது. ஆனால் தற்போதைய இடைத் தேர்தலில் காங்கிரசுக்கு 3 ஆயிரத்து 90 ஓட்டுகள் மட்டுமே கிடைத்துள்ளது. 

இதே போல் 18 சட்டசபை தொகுதிகள், நெல்லூர் எம்.பி. தொகுதியில் கடந்த தேர்தலுடன் ஒப்பிடும் போது மிகவும் குறைவான ஓட்டுகளே கிடைத்துள்ளன. இடைத் தேர்தலுக்கு முன்பு நடிகர் சிரஞ்சீவி அனைத்து தொகுதிகளிலும் சென்று சூறாவளி பிரச்சாரம் செய்தார். ஆனால் அவரது பிரச்சாரம் எடுபடவில்லை. தேர்தல் சமயத்தில் ஜெகன்மோகன் ரெட்டி சிறையில் அடைக்கப்பட்டதால் அங்கு அவருக்கு அனுதாப அலை வீசியது. இதனால் காங்கிரஸ், தெலுங்கு தேசம் போன்றவை படுதோல்வி அடைந்ததாக அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். பொதுத் தேர்தலுக்கு முந்தைய இந்த மினி தேர்தலில் ஜெகன்மோகன் கட்சி அபார வெற்றி பெற்று இருப்பதால் காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சிகள் கலக்கம் அடைந்துள்ளன. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்