முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரையில் விளம்பர பலகைகளை தானேமுன்வந்து உடனே அகற்றவேண்டும்

செவ்வாய்க்கிழமை, 19 ஜூன் 2012      தமிழகம்
Image Unavailable

மதுரை,ஜூன்.- 18 - மதுரை மாநகராட்சி பகுதிகளில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகைகளை விளம்பரதாரர்களே தாமாக முன்வந்து அப்புறப்படுத்தவேண்டும் என்று கலெக்டர் அன்சுல்மிஸ்ரா கேட்டுக்கொண்டுள்ளார். மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட விளம்பரப் பலகைகள் ஆங்காங்கே அனுமதியில்லாமல் வைக்கப்பட்டிருப்பது எனது கவனத்திற்கு தெரிய வந்திருக்கிறது. விளம்பரப்பலகை வைக்கவேண்டும் என்றால் முறையாக மாவட்ட ஆட்சித் தலைவரிடத்தில் உரிமம் பெற்று அதற்குரிய தொகையை அரசுக்கு செலுத்திய பின்னர்தான் விளம்பரப்பலகை வைக்கவேண்டும் என்பது தமிழ்நாடு நகர் உள்ளாட்சி அமைப்புகள், விளம்பரப்பலகைகள், உரிமங்கள், மற்றும் விளம்பரக்கட்டணங்கள் விதித்தல் விதிகள் 2003ல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால் மதுரை மாநகரப்பகுதிகளில் அனுமதியில்லாமல் ஆங்காங்கே தனிநபர்கள் விளம்பரப்பலகைகளை வைத்துள்ளார்கள். இது அரசு விதிகளுக்கு புறம்பானதாகும். எனவே சம்பந்தப்பட்ட நபர்கள் விளம்பரப்பலகைகளை தாமாக முன்வந்து ஒரு வார காலத்திற்குள் அப்புறப்படுத்தவேண்டும். அவ்வாறு அப்புறப்படுத்தாத நபர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுப்பதோடு மாநகராட்சி மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் மூலம் அப்புறப்படுத்தப்படும். விளம்பரப்பலகை அப்புறப்படுத்துவதற்கான செலவினத் தொகையை சம்பந்தப்பட்ட நபர்களிடமிருந்து வசூலிக்கப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்