முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருவனந்தபுரத்தில் மாணவர் போராட்டத்தில் வன்முறை

புதன்கிழமை, 20 ஜூன் 2012      இந்தியா
Image Unavailable

திருவனந்தபுரம், ஜூன். - 20 - திருவனந்தபுரம் தலைமை செயலகம் முன்பு நடந்த மாணவர் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. போலீசார் மீது கல்வீசி தாக்கியதால் தடியடி நடத்தப்பட்டது.  கேரள மாநிலம் இடுக்கி மாவட்ட இந்திய மாணவர் சங்க துணை தலைவராக இருந்த அணீஸ்ராஜ் என்பவர் சமீபத்தில் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் யாரும் கைது செய்யப்படவில்லை. இதற்கு கண்டனம் தெரிவித்து திருவனந்தபுரம் பல்கலைக் கழகத்தில் இருந்து தலைமை செயலகம் நோக்கி இந்திய மாணவர் சங்கத்தை சேர்ந்தவர்கள் ஊர்வலமாக சென்றுள்ளனர். தலைமை செயலகம் அருகே சென்றதும் போலீசார் அவர்களை தடுத்தனர்.  இதனால் மாணவர்கள் அனைவரும் ரோட்டில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்லும் படி போலீசார் அறிவுறுத்தினர். இதற்கு மாணவர்கள் மறுக்கவே, போலீசார் சில மாணவர்களை கைது செய்தனர். இதில் ஆத்திரமடைந்த மாணவர்கள் போலீசார் மீது கற்களை வீசி தாக்கினர். வன்முறையில் ஈடுபட்ட மாணவர்கள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் கலைத்தனர். இது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்