முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடலில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்களுக்கு வாக்கிடாக்கி...!

புதன்கிழமை, 27 ஜூன் 2012      தமிழகம்
Image Unavailable

 

ராமநாதபுரம் ஜுன்- 27 தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக கடலில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்களுக்கு இலவசமாக வாக்கி டாக்கி எனப்படும் தகவல்தொடர்பு சாதனங்களை அமைச்சர்கள் ஜெயபால், சுந்தர்ராஜ் ஆகியோர் வழங்கினார்கள். கடலில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் புயல், கடல்சீற்றம் போன்ற இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்படும்போது உதவி கேட்டு தகவல் தெரிவிக்கவும், கடலில் மீன்வளம் அதிகமாக இருக்கும் பகுதிக்கு சென்றால் அது குறித்து மற்ற மீனவர்களு;ககு தெரிவிக்கவும் வசதியாக வாக்கிடாக்கி எனப்படும் தகவல்தொடர்பு சாதனங்களை வழங்க முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதற்காக ரூ 7.73 கோடி நிதி ஒதுக்கீடும் செய்துள்ளார். அதனை தொடர்ந்து தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் உள்ள மீனவர்களுக்கு தலா ரூ 13 ஆயிரம் மதிப்புள்ள வாக்கி டாக்கிகளை இலவசமாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயபால், கைத்தறித்துறை அமைச்சர் சுந்தர்ராஜ் ஆகியோர் வழங்கினர். 

 

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் சமுதாயக்கூடத்தில் மாவட்ட கலெக்டர் நந்தகுமார் தலைமையில்;, கால்நடை, பால்வளம், மீன்வளத்துறை செயலாளர் ககன்ஜித்சிங்பேடி, மீன்வளத்துறை இயக்குநர் சி.முனியநாதன்,, ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற விழாவில்  மீன்வளத்துறை அமைச்சர் கே.ஏ.ஜெயபால் ;,  கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் எஸ்.சுந்தர்ராஜ் ஆகியோர் 18  நாட்டுப்படகு மீனவர்களுக்கு விலையில்லா தகவல் தொடர்பு சாதனம்(றயடமநை-வயடமநை) வழங்கினார்கள். 

 

இவ்விழாவில் மீன்வளத்துறை அமைச்சர் கே.ஏ.ஜெயபால்  பேசும்போது தெரிவித்ததாவது:

மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்து அவர்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுக்கின்ற வகையில் நல்லாட்சி நடத்தும்  தமிழக முதல்வர் அவர்கள் மீனவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். மீன்பிடி தடைக்காலத்திற்கு ரூ.2,000 வழங்கி வருவதுடன், சிறப்பு திட்டமாக ரூ.4,000 வழங்க உத்திரவிட்டு செயல்படுத்தி வருகிறார்கள். கடலுக்குச் சென்று காணாமல் போனவர்களின் குடும்பத்திற்கு நாள் ஒன்றுக்கு ரூ.250- வீதம் 30 நாட்களுக்கு ரூ.7,500 வழங்கி வருகிறார்கள். மீனவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு மீன்வள பல்கலைக்கழகம் நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைக்க அனுமதி அளித்துள்ளார்கள். அதைத்தொடர்ந்து பணிகள் நடைபெற்று வருகிறது. இராமநாதபுரம் மூக்கையூரில் மீன்பிடித்துறைமுகம் அமைக்க அனுமதி வழங்கியுள்ளார்கள். 2012-2013 ஆம் ஆண்டிற்கு, ரூ.7.81 கோடி மதிப்பில், மீன்இறங்குதளம் அமைக்க 10 இடங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டதில் ராமநாதபுரம் மாவட்டம்    ரோச் மாநகர், தேவிபட்டிணம் ஆகிய 2 இடங்களுக்கு மீன்இறங்குதளம் அமைக்க ஆணையிடப்பட்டுள்ளது.

 

           தமிழகத்தில் உள்ள 13 கடலோர மாவட்டங்களில் முதல் மாவட்டமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் மத்திய தகவல் தொடர்பு ஆணையத்திடம் அனுமதி பெற்ற   18 நாட்டுப்படகு மீனவர்களுக்கு விலையில்லா தகவல் தொடர்பு சாதனம்(றயடமநை-வயடமநை) வழங்கப்படுகிறது. ஒரு விலையில்லா தகவல் தொடர்பு சாதனத்தின் மதிப்பு ரூ.13,081 ஆகும். தமிழ்நாட்டிலுள்ள மீனவர்களுக்கு விலையில்லா தகவல் தொடர்பு சாதனம் வழங்குவதற்கு ரூ.7கோடியே73 இலட்சம் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் ஒதுக்கீடு செய்துள்ளார்கள்.  விலையில்லா தகவல் தொடர்பு சாதனத்தின் மூலம் மீனவர்கள் தங்களின் ஆபத்து காலங்களில் உடனுக்குடன் தகவல் தெரிவிக்கலாம். இச்சாதனமானது 35 கீ.மீ. தூரம் வரை தொடர்பு கொள்ள உதவியாக இருக்கும். பாம்பன், சின்னஏர்வாடி, தொண்டி ஆகிய 3 இடங்களில் தகவல் தொடர்பு கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. இது 5 வாட் சக்தி கொண்டதாகும். மத்திய தகவல் தொடர்பு ஆணையத்திடம் அனுமதி பெற்ற பின் மீதமுள்ள மீனவர்களுக்கு விலையில்லா தகவல் தொடர்பு சாதனம் வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.

 கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் .சுந்தர்ராஜ் ; பேசும்போது தெரிவித்ததாவது:

 தமிழக முதல்வர் ;,  மீனவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். தமிழ்நாட்டிலேயே முதன் முதலில் இராமநாதபுரம் மாவட்டத்தில் 18 நாட்டுப்படகு மீனவர்களுக்கு விலையில்லா தகவல் தொடர்பு சாதனம் அளிப்பது இராமநாதபுரம் மாவட்டத்திற்கு பெருமை சேர்ப்பதாகும். மேலும் இராமநாதபுரம் மாவட்டத்திற்கு மீன்வள துணை இயக்குநர்  அலுவலகம் துவங்க அனுமதி வழங்கியுள்ளார்கள். இதற்கு இராமநாதபுரம் மாவட்ட மக்கள் நன்றியுடையவர்களாக இருப்பர் எனத் தெரிவித்தார்.

 முன்னதாக கீழக்கரை, மண்டபம் வடக்கு, மண்டபம் தெற்கு ஆகிய 3 மீன் இறங்கு தளங்களையும் பார்வையிட்டு அதிகளவில் படகுகள் நிறுத்தி வைப்பதற்கு வசதியாக 3 மீன் இறங்கு தளங்களை விரிவுபடுத்தி திட்டமதிப்பீடு தயார் செய்து வழங்குமாறு சம்மந்தப்பட்ட அலுவர்களுக்கு  மாண்புமிகு மீன்வளத்துறை அமைச்சர் உத்திரவிட்டார்.பின்னர்  மண்டபம் முனைக்காடு கடல்பகுதியில் மீனவர் கடல்பாசி வளர்ப்பதையும், மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலையத்தில் உள்ள மீன் வளர்ப்பு நிலையத்தையும் பார்வையிட்டனர்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் அன்வர்ராஜா, மாவட்ட கழக செயலாளர். கே.சி.ஆனிமுத்து, ராமநாதபுரம் நகராட்சி தலைவர் எஸ்.கே.ஜி.சேகர், ராமேஸ்வரம் நகராட்சி தலைவர் அர்ச்சுணன், மீன்வளத்துறை இணை இயக்குநர் கே.ரங்கராஜூ, மீன்வளத்துறை துணை இயக்குநர் .ரீனாசெல்வி, முதுகுளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மு.முருகன், மாவட்ட ஊராட்சிக்குழுத்தலைவர் சுந்தரபாண்டியன், மாவட்ட ஊராட்சிக்குழுதுணைத்தலைவர் ஒளிமுகமது, மண்டபம் பேரூராட்சித்தலைவர் தங்கமரைக்காயர், மண்டபம் ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர் முனியம்மாள்முனியசாமி, போகலூர் ஊராட்சிஒன்றியக்குழுத்தலைவர் நாகநாதன், நயினார்கோவில் ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர் ராஜேஸ்வரிகார்மேகம், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ராஜ ராஜேஸ்வரி , மீன்வளத்துறை உதவி இயக்குநர்கள்;, உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்