முக்கிய செய்திகள்

மேலூர் தி.மு.க.நிர்வாகிகள் அ.தி.மு.க.வில் இணைந்தனர்

வெள்ளிக்கிழமை, 1 ஏப்ரல் 2011      தமிழகம்
Melur1

 

மேலூர்,ஏப்.1 - மேலூரில் தி.மு.க.பிரமுகர்கள் ஏரளோனர்கள் நேற்று அ.தி.மு.க.வில் இணைந்தனர். மேலூர் தொகுதி அ.தி.மு.க.வேட்பாளர் ஆர்.சாமிக்கு ஆதரவாக தி.மு.க மதுரை புறநகர் மாவட்ட  வழக்கறிஞர் அணி தலைவரும், மேலூர் தி.மு.க.நகர் செயலாளருமான வக்கீல் என்.கலைசெல்வன் தலைமையில் மதுரை  புறநகர் மாவட்ட அதிமுக செயலாளர் முத்துராமலிங்கம் முன்னிலையில் தி.மு.க.மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகளும் அக்கட்சி தொண்டர்களும் 200 -க்கும் மேற்ப்பட்டோர் அ.தி.மு.க.வில் இணைந்தனர். முக்கிய பிரமுகர்களின் பெயர் மற்றும் கட்சி விபரம் வருமாறு சி.தினகரன் தி.மு.க.மதுரை மாவட்ட புறநகர் தலைவர், எம்.மீனாட்சிசுந்தரம், எஸ்.சந்திரன் மேலூர் நகர் காங்கிரஸ் நகர் தலைவர், எம்.மீனாட்சிசுந்தரம் தி.மு.க.மதுரை, மாவட்ட புறநகர் தொழிற்சங்க தலைவர் பி.கருப்பையா தி.மு.க.,  மாவட்ட பிரதிநிதி, எஸ்.சக்திவேல் தி.மு.க.வட்ட பிரதிநிதி, பாலமுருகன் மேலூர் நகர் மாவட்ட தி.மு.க. பிரதிநிதி, மகேஸ்வரன் ஊராட்சி  மனற தலைவர் (டி.வெள்ளாலப்பட்டி), சி.ராஜேந்திரன் மேலூர் 24 வட்டதி.மு.க,பி.தனபாலன் மேலூர் 10 வட்ட தி.மு.க.செயலாளர், காங்கிரஸ் தலைவர் மற்றும் 200க்கும் மேற்பட்டோர் இணைந்தனர். 

  கட்சியில் இணைந்தவர்களுக்கு மாவட்ட செயலாளர் முத்துராமலிங்கம், மேலூர் தொகுதி அதிமுக வேட்பாளர் சாமி ஆகியோர் பொன்னாடை போர்த்தி வரவேற்றனர்.  அதிமுகவில் இணைந்த கலைச்செல்வன் நிருபர்களிடம் கூறியதாவது, திமுகவில் உண்மை தொண்டர்களுக்கு மரியாதை இல்லை. திமுக ஆட்சியில் மக்கள் பழிவாங்கப்படுவதையும் எங்களால் பொறுத்துக்கொள்ளமுடியவில்லை. திமுக ஆட்சியில் விலைவாசி உயர்வு, மின்தடை, ரவுடிகள் அட்டகாசம், குடும்ப அரசியல் என் மனதை பாதித்ததால் திமுகவை விட்டு விலகி அதிமுகவில் இணைந்துள்ளோம் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: