முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமேசுவரம் அக்னிதீர்த்தகடலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள்நீராடினர்

வியாழக்கிழமை, 19 ஜூலை 2012      தமிழகம்
Image Unavailable

 

ராமேசுவரம், ஜூலை - 19 - ஆடி அமாவாசை முன்னிட்டு ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேற்று புனித நீராடினார்கள். புனித தலமான ராமேசுவரம் ராமநாதசுவாமி திருக்கோவிலில் தினசரி ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்ய வருகின்றனர்.  ஆடி அமாவாசை முன்னிட்டு நேற்று காலை 6 மணிக்கு கோவிலில் இருந்து ராமர் தங்க கருட வாகனத்தில் புறப்பாடாகி அக்னி தீர்த்த கடற்கரையில் எழுந்தருளினார். பின்னர் ராமருக்கு வேத விற்பன்னர்கள் வேதம் முழங்க மஹா தீபாராதனை நடத்தினர். இதனைதொடர்ந்து ராமர் பக்தர்களுக்கு தீர்த்தம் வாரி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றுது. அப்போது அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னோர்களின் ஆன்மா சாந்தியடைய வேண்டி அக்னி தீர்த்த கடலில் புனித நீராடினார்கள். பின்னர் கோவிலுக்குள் உள்ள 22 தீர்த்தங்களையும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து புனித நீராடினார்கள். மேலும் பக்தர்கள் வரிசையில் காத்திருந்து  ராமநாத சுவாமி, பர்வதவர்த்தினி அம்மனை தரிசனம் செய்தனர். ஆடி அமாவாசை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து சுமார் 80 ஆயிரம் பக்தர்கள் வருகை தந்ததால், மதுரை, திருச்சி, விருதுநகர், தூத்துக்குடி ஆகிய பகுதியில் இருந்து ராமேசுவரத்திற்கு சிறப்பு அரசு பேருந்துகள் இயக்கப்பட்டது. பக்தர்கள் சிரமம் இன்றி நீராடவும், பாதுகாப்பாக தரிசனம் செய்யவும் கோவில் இணை ஆணையர் ஜெயராமன் தலைமையில் கோவில் ஊழியர்கள் மற்றும் ராமேசுவரம் யாத்திரை பணியாளர் சங்க உறுப்பினர்கள் பக்தர்கள் நீராடவும், தரிசனம் செய்யவும் பக்தர்களை ஒழுங்குபடுத்தியும், வழிகாட்டும் பணியிலும் ்ஈடுபட்டனர். பக்தர்களின் பாதுகாப்பிற்காக ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்டத்தில் இருந்து சுமார் 2 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ்ஈடுபட்டு இருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்